
மிகச்சிறிய வயதிலேயே டாரண்டினோ திரைப்படங்களைப் புரிந்துகொள்ளத் துவங்கிவிட்டார் என்பதை சென்ற கட்டுரையில் பார்த்தோம். அவரது கருத்துகளை Cinema Speculation என்ற அவரது புத்தகத்தில் விரிவாகக் கொடுத்திருக்கிறார். விட்டதில் இருந்து தொடர்வோம். இந்தக் கட்டுரையும் Cinema Speculation புத்தகத்தை முன்வைத்தே எழுதப்படுகிறது.
1970இல் இருந்து 1972 வரை, டாரண்டினோவுக்கு எட்டு முதல் பத்து வயது வரை, அவரது மனதை பாதித்த வன்முறை நிறைந்த படங்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் Toll Booth, Godfather, Catch-22, The New Centurions, Bloody Mama போன்றவற்றின் வன்முறைக் காட்சிகளை, அந்தப் படங்களின் கதைகள் தெரிந்ததால் எளிதில் புரிந்துகொள்ள முடிந்ததாக டாரண்டினோ சொல்கிறார். அதே சமயத்தில், திரைப்படங்களை விட, இடையில் திரையிடப்பட்ட ட்ரெய்லர்களில் சில காட்சிகளைப் பார்த்தே மிகவும் பயந்துபோனதாகக் குறிப்பிடுகிறார். அவைகளில் Wait Until Dark, Women In Love, Fortune and Men’s Eyes, 200 Motels ஆகியவை முக்கியமானவை (இங்கே குறிப்பிடப்பட்ட அத்தனை படங்களுமே 70களின் திரையரங்குகளைக் கட்டி ஆண்ட மிக முக்கியமான திரைப்படங்கள். அமெரிக்காவின் ரசனையை வளர்த்தவைகளில் பெரும்பங்கு வகித்தவை என்பதை மனதில் கொண்டு படிக்கவேண்டும். இந்தப் படங்களைப் பற்றித் தேடிப் பாருங்கள்).
அதேசமயத்தில், வால்ட் டிஸ்னி நிறுவனம் வெளியிட்டு உலகெங்கும் மிகப்பெரிய சூப்பர்ஹிட் ஆன கார்ட்டூன் திரைப்படமான Bambi பற்றி ஒரு மிக முக்கியமான கருத்தை எழுதுகிறார் டாரண்டினோ. என்னவென்றால், அந்தத் திரைப்படம் பாம்பி என்ற மான்குட்டியைப் பற்றிய படம். உங்களுக்கு The Lion King படத்தின் கதை தெரிந்தால் Bambi கதை எளிதில் புரிந்துவிடும். பாம்பி என்ற ஆண் மான்குட்டி, காட்டின் இளவரசனான தந்தையுடனும் தாயுடனும் அமைதியான வாழ்க்கை வாழ்கிறது. அதற்கு இரண்டு நண்பர்களும் உண்டு. திடீரென்று மிகச்சிறு வயதிலேயே ஒரு வேட்டைக்காரனால் தன் தாய் கொல்லப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறது. அதன்பின் தந்தையின் வளர்ப்பில் காட்டில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றித் தெரிந்துகொள்கிறது. அப்போது ஒரு மானுடன் காதல் வயப்படுகிறது. எதிரி ஆண் மான்களிடம் இருந்து தனது காதலியைக் காக்கிறது. மிக மோசமான காட்டுத்தீயில் இருந்து தப்பிக்கிறது. படத்தின் இறுதியில் தனது தந்தையின் இடத்தில் அமர்ந்துகொண்டு காட்டைக் காக்கும் பொறுப்பை ஏற்கிறது. இதுதான் Bambiயின் சுருக்கமான கதை.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.