
மார்ச் 14 -2025 -ல் வெளியான தெலுங்கு திரைப்படம் Court -State vs a nobody இணையத்தில் பேசுபொருளாகி பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட ஒரு படமாக இருக்கிறது. இந்தப் படத்தை ராம் ஜெகதீஸ் இயக்க , நானி அவர்கள் தயாரித்துள்ளார்.
படம், போக்சோ சட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. போக்சோ சட்டத்தை தனது சுயநலத்திற்காக கையில் எடுக்கும் அதிகார மனதிற்கும், அந்தச் சட்டத்தைப் பற்றி எதுவுமே அறியாத நாயகன், POCSO சட்டத்தால் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாவதுதான் கதை. கோர்ட் இவர்கள் வாழ்வில் என்னென்ன திருப்புமுனைகளை உண்டாக்குகிறது என்பதை தொய்வில்லாது சொல்லிருக்கிறது திரைக்கதை.
QUIET: COURTS IN SESSION
படம் OTT தளத்திற்கும் வந்து அறுபது நாட்களைக் கடந்திருக்கிறது. இந்த கோர்ட் டிராமா கணிசமான வசூலையும் மக்கள் கவனத்தையும் பெற்றிருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ராம் ஜெகதீஸ், அவருக்கு இது முதல்படம் என்பதில் தொடங்கி, ஜாப்லி, சந்து, சூர்ய தேஜா, மங்கபதி, ஜாப்லியின் அம்மா இவர்களையும் தவிர சந்துவின் அம்மா என கதைக்காக தேர்ந்தெடுத்த அத்தனைக் கதாபாத்திரங்களும் தத்தமது பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
இவர்களைத் தாண்டி, சலவைத் தொழில் செய்துவரும் சந்துவின் அம்மா பயன்படுத்துகிற அயர்ன்பாக்ஸ், ஒவ்வொரு முறையும் ஒலித்து, பின் அமைதியாகிற கோர்ட் பெல், தன் பக்க நியாயத்தைப் பேச முடியாது சந்து மௌனமாக அதிகாரத்தின் முன் கைகளை நீட்டும்போது அவற்றை சிறைபிடித்துக்கொள்ளும் கைவிலங்கு போன்ற ஜடப் (or உயிரற்ற) பொருள்களுக்கும்கூட இக்கதைக்குள் சமமான இடம் இருக்கிறது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.