A Complete Unknown
ஆஸ்கர் 2025 இன் சிறந்த படப் பிரிவின் பரிந்துரைப் பட்டியலில் இருந்த படங்களில் எனக்குப் பிடித்த இன்னொரு படம் A Complete Unknown.
இசைக்கலைஞர் பாப் டிலான் (Bob Dylan) வாழ்வை ஒட்டிய படம். அவரின் முழுமையான Biopic எனச் சொல்லிவிட முடியாது. ஆனால் பாப் டிலான் ஒரு இசைக்கலைஞராக எப்படி உருவாகி வந்தார் என்பதைச் சொல்லும் படம். கூடவே அவருக்கு உத்வேகமாக இருந்த முன்னத்தி ஏர் இசைக் கலைஞர்கள், சக இசைக் கலைஞர்கள், நாட்டுப்புற இசை மேலெழுந்து வந்த காலகட்டம், விடுதலையின் ஏக்கம் மற்றும் மீறல்கள், அசல் கலைஞர்கள் மற்றும் அவர்களின் தனித்துவமான சிக்கல்கள் என எல்லாவற்றையும் இந்த திரைக்கதை உள்வாங்கி இருக்கிறது. எனவே இந்தப் படத்தை பாப் டிலானின் வாழ்வைச் சொல்லும் படமாக மட்டும் அடையாளப்படுத்த முடியாது.
1961 இல் நியூயார்க் நகரத்திற்கு டிலான் வந்ததையும், நாட்டுப்புற இசை உலகில் அவர் விரைவாகப் புகழ் பெற்றதையும் இந்தப் படம் சற்று விரிவாக காட்சிப்படுத்துகிறது. டிலான் தன்னை ஓர் அடையாளமாக முன் நிறுத்த விரும்பாதவர் எனவேதான் இசை உலகில் அவரது இருப்பு மர்மமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. பாரம்பரியங்களை உடைப்பது, வளர்ந்த அடையாளத்தை திடீரென அழித்துக் கொள்வது போன்ற இருப்பு சார்ந்த விளையாட்டையும் ஆடிப் பார்த்தார்.
இரண்டு நிகழ்வுகள் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று 1965 ஆம் ஆண்டு Newport Folk Festival இல் டிலான் எலெக்ட்ரிக் கிதார் வாசித்தது- இதனால் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் ரசிகர்களும், விமர்சகர்களும் டிலானை “ஏழைகளின் குரல்” என்பதாக அடையாளப்படுத்துகின்றனர் ஆனால் அவர் அதை மறுத்து, ராக் இசையைத் தேடிச் சென்றார். முழுக்க பிறரால் உருவாகி வரும் அடையாளத்தை மறுப்பவராகத்தான் டிலான் வாழ்ந்திருக்கிறார்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.