
AMADEUS திரைப்படம் 1984ஆம் ஆண்டு வெளிவந்தது. இன்றளவும் சிறந்த திரைக்கதைகளில் ஒன்றாக எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டத் திரைப்படமாக இருக்கிறது.
மொசார்ட் என்கிற இசைமேதையின் புகழும், இசையும் இன்று அனைவரையும் அடைந்த ஒன்று. அவர் வாழும் காலத்திலும் அவர் பிரபலமாகவே இருந்தார். ஆனால், வறுமையில் தான் அவரால் வாழ முடிந்தது.
மொசார்ட்டின் இசை அவர் காலத்துக்குப் பிறகே தனது முழுமையான அங்கீகாரத்தைப் பெற்றது. அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த அந்தோனியோ சலேரி என்கிற இசையமைப்பாளர் வூல்ஃப்காங் அமேடியஸ் மொசார்ட் மீது பொறாமையும் எரிச்சலும் கொண்டிருந்தார் என்பதும் மிக இளவயதிலேயே மொசார்ட் மரணமடைந்ததற்கு இந்தப் பொறாமை காரணமாக இருந்தது போன்ற செவிவழிச் செய்திகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நாடகம், பின்னாட்களில் திரைப்படமாகவும் வெளிவந்து நீடித்த புகழோடு விளங்குகிறது.
அமேடியஸ் மீது சலேரி கொண்ட பொறாமை என்பது மறைந்து சலேரிக்கு யார் மீது தீராத வன்மமும் பகையும் இருந்தது என்பதில் படம் முடிவடைகிறது. நாம் ஒருசேர மொசார்ட் மீதும் சலேரி மீதும் நம்முடைய இயலாமையின் பெருமூச்சினை வெளிக்காட்டும் தருணம் அது.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் மிகப் பலமான அடித்தளமாக இருந்தது ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் புஷ்கின், மொசார்ட் மற்றும் சலேரியைக் கொண்டு எழுதிய ஒரு கவிதை நாடகம். இதனை அடிப்படையாக்க் கொண்டு பீட்டர் ஷாஃபர் எழுதிய திரைக்கதையை மிலோஸ் ஃபோர்மன் இயக்கினார்.
53 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 40 விருதுகளை வென்றது இந்தத் திரைப்படம்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.