
டேவிட் லிஞ்ச் (David Lynch) அமெரிக்கத் திரைப்பட இயக்குநர். தீவிரமான சினிமா ரசிகர்களின் விருப்பமான இயக்குநர். ஓவியரும் கூட. படங்களை இயக்க வருவதற்கு முன்பு ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டினார். குறும்படங்களை இயக்கிக் கொண்டிருந்தவர் Eraserhead திரைப்படம் மூலமாக பிரபலமடைந்தார். இவரது படங்கள் யாவுமே இவரது சிந்தனைகளின் வெளிப்பாடுகள். ஒவ்வொரு படத்தினையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் முற்றிலும் புதிய பார்வையுடன் தருவதில் அசாத்தியமானவர். விஞ்ஞானம், மெய்ஞானம் இரண்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவரது படங்கள் பல ஆண்டுகள் கழித்தும் புரிந்து கொள்வதற்கான புதிய பரிமாணங்களை கொண்டிருக்கின்றன.கடந்த ஜனவரியில் மரணமடைந்தார். தனது இறுதி காலங்களில் தியானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவருடைய நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது.
மிஸ்டர் லிஞ்ச், உங்களுக்கு அடிக்கடி கோபம் வருவதால் ஆழ்நிலை தியானத்தைக் கற்றுக்கொண்டீர்களா?
கோபம் கொள்ளும் பலரில் நானும் ஒருவனாக இருந்தேன். பொதுவாக மனிதர்கள் தங்களால் யார் மீது கோபத்தைக் காட்ட முடியுமோ அவர்கள் மீதுதான் காட்டுவார்கள். நான் என் முதல் மனைவியிடம் காட்டியிருக்கிறேன். என்ன நடந்ததென்றால், நான் தியானம் செய்ய ஆரம்பித்தேன். இரண்டு வாரங்கள் கழித்து அவள் என்னிடம் வந்து, “என்ன நடக்கிறது” என்றாள். நான், “என்ன சொல்கிறாய்” என்று கேட்டபோது, அவள் ‘எங்கே அந்தக் கோபம்’ என்றாள். அதற்குப்பின் அவள் என் கோபத்தைப் பார்க்கவேயில்லை. பல நேரங்களில் தியானம் செய்யத் தொடங்கும்போது, தங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை அவர்களை விட அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களே கவனிக்கிறார்கள்.
ஏன் தியானம் செய்ய ஆரம்பித்தீர்கள்?
1973ல் ஆரம்பித்தேன். மனிதன் அதன் மூலமாக ஞானம் பெறலாம் என்ற எண்ணமே. மூளையில் ஐந்து அல்லது பத்து சதவீதத்தை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம் என்ற கூற்று என்னைப் பைத்தியமாக்கியது. அப்படியானால் மற்ற பகுதி எதற்கு? எப்படி மூளையை முழுமையாக உபயோகிப்பது? அப்படி உபயோகித்தால் என்ன பெறலாம்? தியானம் என்பது ஜாகிங் அல்லது கடற்கரையில் வெயிலில் இளைப்பாறுவது போன்றது என்று பலர் சொன்னார்கள். தியானம் என்றால் என்ன என்பது பற்றிய தவறான புரிதலை இது காட்டுகிறது. தியானம் என்பது மனதினுள் ஆழமாகச் சென்று வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து, முழுமையாக, உண்மையாக அதை அனுபவிப்பதுதான். மனிதன் வாழ்வதும் அதற்காகவே.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.