
சென்ற இதழில் வெளியான கட்டுரையை எழுதும்போது ஆஸ்கர் முடிவுகள் அப்போதுதான் அறிவிக்கப்பட்டிருந்ததது. நானும் சிறந்த படப் பிரிவில் இருந்த அனைத்து படங்களையும் பார்த்தும் முடிக்கவில்லை. ஐந்து படங்களை மட்டுமேதான் பார்த்திருந்தேன். எனவேதான் இந்தக் கட்டுரையை இரண்டு பாகங்களாக எழுத முடிவெடுத்தேன். முடிவுகள் வழக்கம்போல கலவையான மனநிலையைத் தந்தன. நம்முடைய முன்முடிவுகளில் அல்லது எதிர்பார்ப்புகளில் எண்பது சதவிகிதம் நடந்துவிட்டாலே அது வெற்றிதான் என்கிற அளவில் இந்த ஆஸ்கர் விருது 2025 எனக்கு சாதகமாகத்தான் இருந்தது.
முடிவுகள் வந்த நாளின் முதல் ஆச்சரியம் Anora திரைப்படம்தான். சிறந்த நடிகை விருதோடு ஓரம் கட்டி விடுவார்கள் என நினைத்த படத்திற்கு இவர்கள் ஐந்து விருதுகள் கொடுத்திருக்கிறார்கள் என்பது திகைப்பாக இருந்தது. நிதானமாக யோசித்தபோது அதன் அசல் அமெரிக்க அரசியல் தன்மை பிடிபட்டது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.