
தமிழ் சினிமா வரலாறு பற்றி இப்போது இருக்கும் இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தால், அதற்குத் தேவையான புத்தகம் என்ன?
தமிழ் சினிமா வரலாறு பற்றிப் பல புத்தகங்கள் உண்டு. ஆனால் அவற்றில் கிட்டத்தட்ட எல்லாமே, தமிழ் சினிமாவை ஆச்சரியமாகப் பார்க்கும் ஒரு எழுத்தாளனின் பார்வையிலிருந்தே எழுதப்பட்டவை. இந்தப் புத்தகங்களில் இருந்து பல தகவல்கள் தெரிந்துகொள்ளமுடியும் என்றாலும், பெரும்பாலும் தமிழ் சினிமாவைப் புகழும் புத்தகங்கள் தான் அவை. ஒரு தெளிவான விமர்சனப் பார்வை அவற்றில் இருக்காது. தியடோர் பாஸ்கரன் இதில் விதிவிலக்கு. இவரது புத்தகங்கள் அனைத்துமே தெளிவான விமர்சனப் பார்வையை முன்வைக்கும் தன்மையுடையவை. எனவே, தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘பாம்பின் கண்’ , ‘எம் தமிழர் செய்த படம்’, ‘சித்திரம் பேசுதடி’, ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே’ முதலிய புத்தகங்களை அவசியம் நாம் படிக்கலாம். இவற்றில் தமிழ் சினிமா பற்றிப் பல தகவல்களை நாம் அறிந்துகொள்ளமுடியும். அரிய தகவல்களைத் திரட்டிக் கொடுக்கும் புத்தகங்கள் இவை.

ஆனால் இவைகளுக்கும் மேலாக, ஒரே புத்தகத்தில் ஆரம்பம் முதல் எண்பதுகள் வரையிலான தமிழ் சினிமாவின் வளர்ச்சி பற்றிய ஒரு மிகவும் சுவாரஸ்யமான புத்தகம் உண்டு. அதுதான் ‘தமிழ் சினிமாவின் கதை’. எழுதியவர் அறந்தை நாராயணன். இது நியூ செஞ்சுரி புத்தக வெளியீடு. இதன் விலை ரூ.350\-. இந்தப் புத்தகத்தின் விசேடம் என்ன?
இதோ அறந்தையே பேசுகிறார்.
‘நான் ஆராய்ச்சியாளனல்ல; ஆனால் தமிழ் சினிமாவின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராயப்போகிற ஓராயிரம் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவப்போகிற, தமிழ் சினிமா குறித்த பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையானதும் முதலாவதுமான ஒரு நூலை நான் தமிழுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறேன் என்று கருதுகிறேன்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.