The Talkie
Sunday, November 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home ஆளுமைகள்

சாமான்யக்குரலில் ஒரு சங்கீதக்காரன் – கிருஷ்ணராஜ்

The Talkie by The Talkie
November 1, 2026
in ஆளுமைகள்
A A
0
Krishnaraj
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon பாஸ்கர் சக்தி

அது 1998 ஆம் வருடம். விகடனில் சப் எடிட்டராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது `எம்பாட்டு எம்பாட்டு’ என்று ஒரு தொடர் எழுதினேன். அன்று முன்னணியில் இருந்த பின்னணிப் பாடகர்களைப் பார்த்து உரையாடி அவர்களது அனுபவங்களையும், பாடல்களையும் குறித்துப் பேசி அதனைக் கட்டுரையாக்க வேண்டும். ஶ்ரீநிவாஸ், சுஜாதா,அனுராதா ஶ்ரீராம்,ஹரிணி,மால்குடி சுபா, ஶ்ரீராம்,உமா ரமணன் என்று வரிசையாக பார்த்து, பேசி எழுதுகையில் அந்த வரிசையில் கிருஷ்ணராஜ் பெயரும் இருந்தது.  

`தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் சூப்பர்  ஹிட் ஆகி இருந்தது. அதைப் பாடிய பாடகரைப் பார்க்கப் போகிறோம் என்பதைத் தாண்டி அவரைப் பற்றி வேறு எதுவும் தெரியாமல் சந்திக்கப் போனேன். அதற்கு முன்னரே பல்வேறு பிரபலங்களை சந்தித்திருக்கிறேன். சிலர் நம்மை எடைபோடுவார்கள். சிலர் நம்மை அலட்சியத்துடன் அணுகுவார்கள். சிலர் மிகவும் சம்பிரதாயமாகப் பேசுவார்கள். சிலர் பைப்பைத் திறந்து விட்ட மாதிரி பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு யாரிடமாவது பேச வேண்டும். கேட்பவரது எதிர்வினைகள் குறித்து எந்தக் கவலையுமிருக்காது. பைப் மூடவே மூடாது.

 பிரசாத் ஸ்டுடியோவில்தான் அவரை சந்தித்தேன்.  ஏதோ ஒரு ரெகார்டிங்கில் இருந்து அடக்கமான ஒரு புன்னகையுடன் வந்தார் கிருஷ்ணராஜ்  . அதிர்ந்து பேசாத குரல். அவர் புன்னகைக்கையில் கண்களும் சேர்ந்து புன்னகைத்தன. கைகளைப் பற்றிக் குலுக்குகையில், “இன்டர்வியூ, அதுவும் விகடன் இன்டர்வியூ எனக்கு கனவு மாதிரி இருக்கு “ என்றார். ஓரமாக மரத்தடியில் நின்று பேசத் துவங்கினோம்.

“சேலம் பக்கத்துல ரொம்ப சாதாரணமான ஃபேமிலி சார். நெசவு பண்ற குடும்பம். இளவயசுல இருந்தே மியூசிக்ல இன்ட்ரஸ்ட்டு “ என்று ஆரம்பித்தார். பத்திரிகை வழக்கப்படி “ தஞ்சாவூரு மண்ணெடுத்து“ பாட்டைப் பத்தி சொல்லுங்க என்றதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டபடி அவர் பேசும் விதத்தையே கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு குழந்தை தான் செய்த ஒரு செயலைப்பற்றி வியந்து சொல்லும் தொனியும் , பாவனையும் நாற்பது  வயதைத் தாண்டிய அந்த மனிதரிடம்  இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.  எந்த விதமான அலட்டலோ,பந்தாவோ இல்லாமல் சகஜமாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று நிறுத்தினார்.

“ சார், நாம் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்.நீங்க நோட்ஸ் எதுமே எடுக்காம கேட்டுகிட்டு இருக்கீங்க! எப்படி எழுதுவீங்க?”

“எழுதிருவேன் சார், நீங்க பேசறதை கவனமா கேக்கறேன் இல்லை? மனசுல இருக்கும்,  எழுதிருவேன்”

அவர் லேசான வியப்புடன் , “ அதெப்படி, மறந்துடாதா?”

“மறக்காது சார். நாம இன்வால்வ்மென்ட்டோட கேட்டா மறக்காது “

“ அப்படியா?” என்றார். மனசுக்குள் சந்தேகம் வந்திருக்கும். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து பேசினார். “நல்ல நல்ல பாட்டு வருது சார். பெரிய ஹிட் எல்லாம் ஆகுது. என்னன்னா,  நான் கர்னாட்டிக்கும் நல்லாப் பாடுவேன். ஆனா அந்த மாதிரி பாட்டு வர மாட்டேங்குது “ என்றார். 

“ அதனால என்ன சார், இன்னிக்கு தவிர்க்க முடியாத ஒரு சிங்கர் இல்லியா நீங்க?” என்றதும்,  “ஆமா . ஆனா இந்த இடத்துக்கு வர்றதுக்கு சிரமப்பட்டேன் சார். தேவா சாருக்குத்தான் ரொம்ப நன்றி சொல்லணும்” என்றார். அடிக்கடி தேவாவை நினைவு கூர்ந்தபடியேதான் பேசினார்.

வரிசையாக தான் பாடிய பாடல்கள் , அனுபவங்களை பேசிக்கொண்டிருந்தவர், திடீரென்று “ சார், நான் பாடி சம்பாரிச்சு முதல் முதலா கார் வாங்கி இருக்கேன் . என் காரை பாக்கறீங்களா?”  என்றார். அதைச் சொல்கையில் அந்த மனிதரின் முகத்தில் ஒரு பூரிப்பு மலர்ந்தது . ஏற்கனவே குறிப்பிட்ட அதே குழந்தைத்தனம்.

“ எங்க சார் இருக்கு கார்?”

“வாங்க” என்று பார்க்கிங் பகுதிக்கு கூட்டிப் போனார். அந்தக் காலகட்டத்தின் காரான மாருதி என்று நினைக்கிறேன். அதனை பூரிப்புடன் காட்டி தடவிக் கொடுத்தார். என்னுடன் வந்த ஃபோட்டோகிராபரை அழைத்தேன்.

“சாரை அவரு வாங்கின  காரோட சேர்ந்து ஃபோட்டோ எடுத்துடுங்க?”  என்று நான் சொன்னதும் அவர் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

காருடன் அவரை ஃபோட்டோ எடுத்தோம். ஃபோட்டோகிராபரிடம், “ இந்த ஃபோட்டோ எனக்கு ஒண்ணு வேணும் “ என்று கேட்டுக் கொண்டார். 

“சரிங்க சார். எனக்கு கொஞ்சம் பாடிக்காட்டறீங்களா?” என்று கேட்டேன். அந்தத் தொடரின் போது இப்படி எல்லாப் பாடகர்களிடமும் கேட்பது வழக்கம். சிலர் தயங்கியதுண்டு…ஆனால் கிருஷ்ணராஜ் கணீர் என்று உடனே பாடினார். பாடி முடித்ததும்?” வேற ஒரு பாட்டு பாடவா? “  என்று பாடிவிட்டு பிறகு  “உங்களுக்கு பிடிச்ச பாட்டு எதுன்னு சொல்லுங்க” என்று கேட்டு அதையும் பாடி, கிட்டத்தட்ட  நாலைந்து பாட்டுகளை பாடினார். ஏதோ பேட்டி எடுப்பவன் கேட்கிறான், பாடுவோம் என்றில்லாமல் மிகவும் லயித்துப் பாடினார்.

நான் விடைபெறுகையில்,” சார் பேசினதெல்லாம் ஞாபகமிருக்கா? எழுதிருவீங்கல்ல?” என்றார் சந்தேகம் இன்னும் விலகாமல்.

“சார். நல்லாவே எழுதிருவேன் சார்.” என்றேன் சிரித்தபடி. அவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

 “ சரி.அப்பப்ப மீட் பண்ணலாம் சார்” என்றார். நானும் தலையாட்டினேன். ஆனால் மொபைல் இல்லாத அந்தக் காலகட்டத்தில் அப்படியெல்லாம் நடக்கும் வாய்ப்பு ஏது? அதுவே அவரை முதலும், கடைசியுமாக சந்தித்த தருணம். 

பேட்டி வெளியானது. அதில் அவர் காருடன் இருக்கும் புகைப்படமும் பிரசுரமானது. ஆஃபிசுக்கு ஃபோன் செய்து என்னிடம் பேசினார். 

“சார், எதையும் குறிச்சு வைக்காம நீங்க எப்படி எழுதப் போறீங்களோன்னு டவுட்டா இருந்துச்சு… ஆனா, சூப்பரா எழுதி இருக்கீங்க.. ரொம்ப தேங்க்ஸ்” என்றார். நாலைந்து தடவை நன்றி சொன்னார்.

கிருஷ்ணராஜ் முறைப்படி சங்கீதம் பயின்றவர். பாப்புலரான பாடல்களைப் பாடி பிரபலமானவர். ஆனால் அந்த தடயங்களே இல்லாமல் சேலத்தைச் சேர்ந்த ஒரு எளிய குடும்பத்தின் மனிதனாகவே  பேசினார். 

தொண்ணூறுகளில் தேவா கோலோச்சிய காலகட்டத்தில் கிருஷ்ணராஜின் குரலும் உச்சத்தில் இருந்தது. `வெள்ளரிக்கா, பிஞ்சு வெள்ளரிக்கா’ பாட்டில் துவங்கி அவர் பாடிய பாடல்கள் பலதும் ஹிட்…எல்லோரது வாயிலும் சுலபமாக புகுந்து வரும் பாடல்களை அவர் பாடினார். அவரது குரலை நாம் விலகி நின்று பார்க்க முடியாது. நம்மில் ஒருவர் பாடுவதைப் போலவேதான் நாம் அவர் பாடிய பாடல்களைக் கேட்டோம்.

ரஹ்மான் இசையில், தாஜ்மஹால் படத்தில் அவர் ஒரு பாடல் பாடினார். `ஈச்சி எலுமிச்சி, ஏன்டி கருவாச்சி ‘ என்கிற பாடல். மிகவும் வசீகரமான பாடல் அது. அதனை சுண்டி இழுப்பதைப் போல ஒரு ஜாலத்துடன் பாடி இருப்பார்.

“பாசிமணி ரெண்டு கோக்கையில

பாவி மனசையும் கோர்த்தவளே

நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள 

நெஞ்சில் தீயை வைச்சுப்போனவளே !!!

தத்தி நடக்கிற வாத்துக்கூட்டம்

தண்ணிக்குள்ள முட்டை போடுமடி

வாத்து முட்டையைப் போல உதட்டில் 

வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி !!!

கையில் கைய வைச்சு அழுத்திக்கடி

கண்ணில் கண்ணை வைச்சுக் கலந்துக்கடி

நெஞ்சில் நெஞ்சை வைச்சுப் படுத்துக்கடி

நேரம் வந்தா என்னை உடுத்திக்கடி “

இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். காதலின் தாபம் பெருக்கெடுத்தோடும் ஒரு குரலில் , விரகம் இழையோட அற்புதமாகப் பாடி இருப்பார். 

`வெள்ளரிக்கா’ போன்ற துள்ளலான பாடலுக்கும், `தஞ்சாவூரு மண்ணெடுத்து ‘ போன்ற கிராமிய மணத்துடன் கூடிய பாடலுக்கும், `உன்னருகில் நானிருந்தால்’ என்று காதலில் உருகும் பாடலுக்கும் என எல்லாவிதமான பாடல்களோடும் பொருந்திப் போகிற குரலைக் கொண்டிருந்தவர் கிருஷ்ணராஜ்

எண்பதுகளில் எஸ் பி பி, ஜேசுதாஸ், ஜானகி, சுசீலா, மலேசியா வாசுதேவன்,மனோ,சித்ரா  என்று ஏழெட்டுப் பாடகர்கள்தான் இருந்தார்கள். ஆனால் தொண்ணூறுகளில் நிறைய பின்னணிப் பாடகர்கள் பாடினார்கள். ரஹ்மான், தேவா இருவரின் வருகைக்குப் பின்னர் பாடகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அத்தனை பாடகர்களுக்கு நடுவில் தனித்து தனக்கான இடத்தைப் பிடித்தவர் கிருஷ்ணராஜ்.

இளையராஜா , ரஹ்மான் போன்றவர்களை நாம் ரசிப்போம். நேசிப்போம் . ஆனால் அவர்கள் நம்மிலிருந்து கொஞ்சம் தள்ளித்தான் இருப்பார்கள்.

எஸ் பி பி, ஜேசுதாஸ் போன்ற பாடகர்களும் அவ்விதமே. அவர்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள்தான் . ஆனால் அவர்களை நம்மில் ஒருவராக உணர மாட்டோம்.

ஆனால் இசையமைப்பாளர்களில் தேவா, பாடகர்களில் கிருஷ்ணராஜ் ஆகியோரை நாம் விலக்கியே பார்க்க முடியாது. அவர்கள் நமக்கு முன்னால் நின்று இசைப்பது போல் தோன்றியதே இல்லை. அவர்கள் நம் அருகிலோ,பின்னாலோ, நம் கூடவே இருந்து இசைத்துக் கொண்டிருந்தார்கள். ஜனத்திரளின் உள்ளே இருந்து பாடிக்கொண்டிருந்தார்கள் என்றுதான் மனதுக்குப் படுகிறது.

பாரதிராஜா இறந்த சில தினங்களில் அவரது சிஷ்யன் பாக்யராஜ் அவரைப் பின் தொடர்ந்து விடைபெற்றார்.

தேவா இறந்த சில நாட்களிலேயே அவருக்கு அணுக்கமான கிருஷ்ணராஜும் மறைந்தது வெகு வினோதமான, அபூர்வமான நிகழ்வு.

இவர்களெல்லாம் நம்மிடமிருந்து விடைபெற்றுப் போகலாம். அது இயற்கை. ஆனால் நம் மனதில் சிறைப்பட்டிருக்கும் இவர்களது படைப்புகளும் , நினைவுகளும் மங்காமல் நிலைத்திருப்பவை. அவர்களது புகழைப் போல.

Author Image

பாஸ்கர் சக்தி

திரைப்பட இயக்குநர். எழுத்தாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
P.C.Sreeram

ஸ்டார்ட் கேமரா 13 பி.சி ஸ்ரீராம்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026
singeetham

கற்பனாவாதி Unlimited

November 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?