The Talkie
Sunday, November 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home ஆளுமைகள்

கற்பனாவாதி Unlimited

The Talkie by The Talkie
November 1, 2026
in ஆளுமைகள்
A A
0
singeetham
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon ஜா.தீபா

சிங்கீதம் சீனிவாச ராவ் அவரது கடைசிப் படமான SingGeetham படத்தினை இயக்கும்போது அவர் வயது என்னவென்பது முக்கியமில்லை. எது மாதிரியான ஐடியாவை அவர் நமக்குப் படமாக மாற்றிக் காட்டினார் என்பது தான் ஆச்சரியப்பட வேண்டியது. முனிவரின் ஒரு சாபத்தினால் அந்த ஊரில் உள்ளவர்களுக்கு பேச்சுக்குரல் மாறி, எல்லாருமே பாடுவார்கள். ஒரு இசை நாடகம் போல என்கிற ஐடியாவை 2026 லும் சினிமாவில் காட்ட முடியும் என்பதெல்லாம் சிங்கீதம் அவர்களால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு மற்றும் தமிழில், மிக சுவாரஸ்யமான மாயாஜால காட்சிகள் நிறைந்த புராணப் படங்களை இயக்கிய K.V ரெட்டி சிங்கீதம் சீனிவாச ராவுக்கு மிகப் பிடித்தவரானார். மெட்ராஸ் பிரெசிடென்சி கல்லூரியில் படிப்பை முடித்ததும் அப்பா ராமச்சந்திர ராவைப் போல பள்ளியில் ஆசிரியராக வேண்டியதில்லை சினிமாதான் இலக்கு என்று முடிவெடுத்தார். அம்மா சகுந்தலா பாய் வயலின் கலைஞர் என்பதால் இயல்பிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்த சிங்கீதத்திற்கு சினிமாவில் சேர்வது மட்டுமே ஒரே விருப்பமாக இருந்தது. ஆனால் எத்தனை முயற்சித்தும் K.V ரெட்டியை சந்தித்து அவரிடம் உதவியாளராக முடியவில்லை. மனமே இல்லாமல் சில நாட்கள் பள்ளி ஆசிரியராக வேலை செய்து மீண்டும் K.V ரெட்டியைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார். சந்திக்கவும் செய்தார். W.W.ஜேகப் எழுதிய Monkey’s Paw என்றும் சிறுகதையைத் தந்து இதைத் திரைப்படமாக மாற்றினால் எப்படி எழுதுவாயோ அப்படி எழுதிக் கொண்டு வா என்று சொல்லியிருந்தார் ரெட்டி. கல்லூரி படிக்கும்போதே பிரபல நாடகாசிரியரும், சரோஜினி நாயுடுவின் சகோதரருமான ஹரீந்த்ரநாத் சட்டோபாத்யாய் நாடகங்களில் இணைந்து பணியாற்றியதால் திரைக்கதை எழுதும் அனுபவம் கொண்டிருந்தார் சிங்கீதம். மூன்று மாத காலங்கள் எடுத்துக் கொண்டு அந்த சிறுகதைக்கு திரைக்கதை வசனத்தை எழுதி ரெட்டியிடம் கொடுத்து அவரிடம் நற்பெயர் பெற்று உதவி இயக்குநராக பணி செய்தார்.   

மிகு கற்பனையான உலகை, ஐடியாவை உருவாக்குவதில் சிங்கீதம் அவர்களுக்கு அடிப்படையிலேயே ஆர்வம் இருந்திருக்க வேண்டும் அதனால் தான் பாதாள பைரவி, மாயா பஜார் மாதிரியான படங்களை இயக்கிய இயக்குனருடன் தான் பணி செய்வேன் என்று பிடிவாதமாய் இருந்திருக்கிறார். அன்றைய தினம் தொடங்கி புதுப் புது சிந்தனைகளுடன் அவர் இயக்கிய படங்கள் எல்லாமே தனித்தனியாகக் குறிப்பிட்டு பேசப்பட வேண்டியவை.

தமிழில் அவர் இயக்கிய முதல் திரைப்படம் மிக யதார்த்தமான கதைக்களம் கொண்டது. ராஜாஜி எழுதிய திக்கற்ற பார்வதி நாவலை திரைக்கதையாக எழுதி அதே பெயரில் இயக்கினார் சிங்கீதம். அந்தப் படம் குடியினால் குடும்பங்கள் சீர்குலையும் என்கிற பாதிப்பினை எடுத்துச் சொன்னது. ராஜாஜியின் சொந்தக் கிராமமான ஓசூர் தொரப்பள்ளி கிராமத்திலேயே எடுத்திருந்தார். அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் இந்தப் படத்தினை தமிழக அரசு சாபில் விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். இப்படி ஒரு மாநிலமே சொந்தமாக ஒரு படத்தினை வாங்குவது அதுதான் முதன்முறை. குடிப் பழக்கத்துக்கு எதிரான படம் என்பதுதான் இதற்குக் காரணமாக அமைந்திருந்தது. இந்தப் படத்துக்கு வீணை மேதை சிட்டிபாபு இசையமைத்திருந்தார். அந்தக்காலத்து வழக்கப்படி ஐந்தாறு பாடல்கள் என்றில்லாமல் தேவைப்படும் இடங்களில் மட்டும் பாடலை இடம்பெறச் செய்திருந்தார் சிங்கீதம். ‘பாடல்கள் என்பது படத்தின் கதையில் தவிர்க்க முடியாத உணர்வாக இருக்க வேண்டும். அதுவும் ஒருவிதமான உரையாடலாகவே இருக்க வேண்டும்’ என்று ஒரு நேர்காணலில் சிங்கீதம் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் கேசட் விற்பனைகளை முன்வைத்து ஐந்து அல்லது ஆறு பாடல்கள் என்கிற கட்டாயம் வந்தபோதும் கூட ஒவ்வொரு பாடல்களுமே கதையின் அங்கமாக இருக்க வேண்டும் என்றே அமைத்திருக்கிறார். 

கண் தெரியாத ஒரு வயலின் கலைஞனின் கதை எனும்போது அதை மையமாக வைத்தே பாடல்களைத் தந்திருக்க முடியும். ஆனால், ராஜபார்வை படத்தில் மிகக்குறைவான பாடல்களே இடம்பெற்றிருந்தன. தேவைப்படும் இடங்களில் மட்டுமே வயலின் இசைக்கப்பட்டிருந்தது. கதையின் மையம் நாயகனின் இசைத்திறமை அல்ல, அவனுடைய காதல் கை சேர்ந்ததா என்பதுதான். அதை நோக்கியே முழுக்கதையும் செல்லும். சில படங்கள்தான் என்று பார்த்தாலும் காலத்தின் தூசி படியாது காட்சி தரும். அப்படியான ஒரு படம் ராஜபார்வை. தமிழ்சினிமாவின் கர்த்தாக்களில் ஒருவரான இயக்குநர் எல்.வி பிரசாத் இந்தப் படத்தில் நடித்திருப்பார். சிங்கீதம் போன்றோருக்கு முன்மாதிரி அவர். அவரை இயக்கும் வாய்ப்பு சிங்கீதத்துக்குக் கிடைத்திருந்தது. 

ராஜபார்வையின் ஒவ்வொரு காட்சியுமே பேசப்படவேண்டியது. குறிப்பாக, மாதவி கமல்ஹாசனை சந்திக்கக் கிளம்பும் காட்சி. அப்பாவுக்குத் தெரியாமல் கமல்ஹாசனை சென்று சந்திக்க வேண்டும். அப்பா வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டிருப்பார். எப்போது அவர் கிளம்புவார், நாம் எப்போது வீட்டிலிருந்து கிளம்பலாம் என்கிற அவரது தவிப்பில் தன்னைச் சுற்றி எல்லாமே மெதுவாக நகருவதாக மாதவிக்குத் தோன்றும். இதனைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் மிக சுவாரஸ்யமானது. மாதவி வீட்டினுள் பதற்றமாக முன்னும் பின்னும் நடந்து கொண்டிருப்பார். அவருடைய அப்பா பெட்டியை எடுப்பதும், அவரது அம்மாவிடம் விடை பெற்றுக்கொள்வதும், கிளம்புவதும் என செய்வதெல்லாம் மாதவிக்கு மெதுவாகத் தோன்றும். ஒரே ஃபிரேமில் இரண்டினையும் காட்டிய விதம் ஆச்சரியப்படத்தக்கது. படத்தின் க்ளைமாக்ஸ் வரை என்ன நடக்கப்போகிறதோ என்கிற எதிர்பார்ப்பு இருக்கும் மாதவிக்கு சர்ச்சில் வேறொருவருடன் திருமணம் என்பதுவரைக்கும் கூட கதை வந்துவிடும். அதற்குப் பிறகு கடைசி நான்கைந்து நிமிடங்களில் படம் முடிந்துவிடும். எந்த ‘பில்ட் அப்பும்’ இல்லாத நறுக்குத் தெரித்தாற்போல அதே நேரம் உணர்வுப்பூர்வமான முடிவைத் தந்த படம். 

தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் ராஜ்குமார் என இருவருக்கும் அதிகப் படங்களை இயக்கியிருக்கிறார். கமல்ஹாசனோடு சிங்கீதம் இணைந்த படங்கள் எல்லாமே தமிழ்சினிமாவின் மைல் கற்கள். எளிமையான நகைச்சுவைப் படங்கள் போன்ற தோற்றம் தந்தாலும் சாகசமும், பரிட்சார்த்தமும், தயாரிப்பதற்கு கடினமும் கொண்டவை. மும்பை எக்ஸ்பிரஸ் படம் ஒரு கடத்தல் திட்டம் தவறாகி அதனால் ஏற்படுகிற விளைவுகளைச் சொல்கிற ஒன்று. இதனை எப்படிச்சொல்லியிருந்தாலும் சரியாக இருந்திருக்கும். ஆனால், ஒவ்வொரு காட்சியும் மெனக்கிடலோடு எடுக்கப்பட்டவை. கமல்ஹாசன் பசுபதியையும், மாணவனையும் காப்பாற்ற கிரேனில் இருந்து கயிறு மூலமாக கீழே இறங்கும் ஒரு காட்சி ஆபத்தானது. கதையின் முக்கியக் காட்சி. ஆனால், நாம் சிரிப்போம். பள்ளிக்கூட மாணாக்கர்கள்  மைதானத்தில் நின்றுகொண்டு கயிற்றில் இறங்கும் கமல்ஹாசனைப் பார்த்துக் கொண்டே கொடுக்கும் ரியாக் ஷன்கள். எத்தனை முறை பார்த்தாலும் அலுப்புத்தராத , வியக்க வைக்கிற ஒரு காட்சி.  

அபூர்வ சகோதர்கள் படத்தில் கமல்ஹாசனுக்கு மூன்று வேடங்கள். அதில் ஒன்று குள்ளமான உருவமைப்பு கொண்ட கதாபாத்திரம். இதற்கான திரைக்கதை கமல்ஹாசன் எழுதியது. மிகுந்த உழைப்பைக் கோருகிற இந்தப் படத்துக்கு சிங்கீதம் தவிர வேறு எவரையும் கமல்ஹாசனால் நினைத்துப் பார்த்திருக்க முடியவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் பழிவாங்கும் கதைதான். ஆனால், அதற்குள் இருந்த அடுக்குகள் வெவ்வேறானவை. இரண்டரை மணி நேர படத்துக்குள் ஒவ்வொரு காட்சியும் புதியது. காட்சியே புதிது என்றபோதிலும் அதைச்சொன்ன விதம் இன்னும் சுவாரஸ்யம் தருவது. ‘கமல்ஹாசனின் புகைப்படம் கண்ணை சிமிட்டுவது, அப்புவின் முகத்தில் இருந்து அப்பா கமலின் முகமாக மாறுவது, ஒவ்வொரு கொலைகளையும் விதவிதமாக யோசிப்பது ,  க்ளைமாக்சில் நாகேஷை சர்க்கஸில் தொங்கவிடுவது என ஆச்சரியம் கொண்டு பேசுவதற்கான அம்சங்களைக் கொண்டிருந்த படம் இது. ஒன்றரை வருட காலம் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. யானை, சிங்கம், குரங்கு, பறவைகள், நாய்கள் சர்க்கஸ் மிருகங்கள் படத்தின் பின்னணியில் வருபவையாக இல்லாமல், அவை கதாபாத்திரங்களாகவே வரும். தமிழ் சினிமாவின் சாகாவரம் பெற்ற கதாபாத்திரங்களில் குள்ள அப்புவும் உண்டு.   

கதைக்களங்கள் என்பது சிங்கீதத்தின் படங்களில் ஒரு அங்கம். கதையின் நாயகன் எந்த உலகத்தைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுகிறபோதே அது சார்ந்தே அவனது சிந்தனையும் செயல்பாடும் அமையும் என்றும் காட்டிவிடுகிறார். காதலா காதலா படத்தின் நாயகர்கள் பெற்றோர் இல்லாமல் வளர்ந்தவர்கள். இதிலும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடும் குட்டி கமல் அப்படியே பெரியவராவது, எம்எஸ்வியை நடிக்க வைத்தது, முருகன் அடிக்கடி எம்.எஸ்.வியின் கனவில் வருவது, என ஆச்சரியங்கள் உண்டு. ஆள்மாறாட்டக் கதை என்றபோதும் அலுக்காமல் சொல்லத் தெரிந்தவர். அபூர்வ சகோதர்களில் குள்ளமான உருவமைப்பு கொண்டவர் நாயகன் , காதலா காதலாவில் பிரபுதேவா திக்கித் திக்கிப் பேசுபவர். மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் கமல்ஹாசன் செவித்திறன் இல்லாதவர். ராஜபார்வையில் நாயகன் பார்வைத் திறன் அற்றவர். ஆனால் எங்குமே அவர்கள் மீது பரிதாபம் இல்லாமல் அவர்களின் இயல்போடு நம்மை ரசிக்க வைத்து கதை சொல்லியிருக்கிறார்.

மைக்கேல் மதன காமராஜன் படமெல்லாம் எப்போது பார்க்கையிலும் வியப்பு ஏற்படுத்துவது. தொழில்நுட்பரீதியாகவும் மிகச் சவாலான படம். க்ளைமாக்ஸ் காட்சியில் படத்தில் நடித்த அத்தனைக் கதாபாத்திரங்களையும் இணைத்து செய்த சாகசம் எல்லாம் அதற்கு முன்பு தமிழ் சினிமா கண்டதில்லை.  நான்கு கமல்ஹாசன்களும் கூட அந்தக் காட்சியில் உண்டு. இந்தப் படத்திலும் ‘சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்’ பாடல் முழுக்க ஸ்லோ மோஷனில் படம்பிடிக்கப்பட்டிருக்கும். சிங்கீதம் அளவுக்கு பரிட்சார்த்த முயற்சிகளை மற்ற இயக்குநர்களால் ஜனரஞ்சகமான படத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை.  

பெண்களை மையமாக வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைத்ததெல்லாம் மாபெரும் சவாலான முடிவு. மூன்று பெண்கள் ஒரு வில்லன், ஒரு ஆபிஸ். இவை தான் மொத்தமுமே. ‘மகளிர் மட்டும்’ மாதிரி ஒரு படம் அது வெளியான காலத்திற்கு முந்தையது. பெண்கள் தனியார் நிறுவன அலுவலகங்களுக்கு வேலைக்குப் போகத் தொடங்கிய காலகட்டத்தில் வந்த படம். இன்று நாம் பேசுகிற work life balance, சம உரிமை, பணியிடங்களில் பாதுகாப்பின்மை என எல்லாவற்றையும் பற்றி சிரிக்க சிரிக்கக் காட்டி, அதே நேரம் பெண்களின் அவஸ்தைகளையும் மகளிர் மட்டும் பேசியது. குழந்தை பிறந்தவுடன் வேலையை விட்டுவிடுவதும், குழந்தை பிறக்கும் என்பதாலேயே வேலைக்குச் செல்லாமல் இருப்பதுமான சூழல் இன்றும் பெண்களுக்கு நிலவுகிறது. இதற்கு இந்தப் படத்தில் ஒரு தீர்வு இருந்தது. ஒவ்வொரு அலுவலகங்களிலும் குழந்தைகள் காப்பகம் இருந்தால் பெண்களுக்கு எத்தனை எளிதாக இருக்கும் என்கிற தீர்வையும் சொல்லியிருப்பார். பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ  இந்திரா நூயி, தான் தலைமயேற்றபோது செய்த ஒரு நிர்வாக முடிவு, பெப்சிகோவின்  அத்தனை கிளை அலுவலகங்களிலும் குழந்தைகள் காப்பகம் உருவாக்கியது தான். அதன் பிறகு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அலுவலகம் வந்ததாகச் தனது சுயசரிதை புத்த்கத்தில் எழுதியிருப்பார். இது புதுமையான சிந்தனையாக அமெரிக்காவில்  பேசப்பட்டபோது அதற்கு முன்பே தனது படத்தில் சிங்கீதம் காட்சியாக அமைத்திருந்தார்.   

மௌனப்படங்களின் காலம் முடிந்து போய் ஐம்பது வருடங்கள் கழித்து அப்படி ஒன்றை எடுத்தால் என்ன என்று பேசும்படம் படத்தினை இயக்கி அதனை வெற்றிபெறச் செய்திருக்கிறார். படத்தில் எல்லா விதமான ஒலியும் இருக்கும். ரேடியோ பாடும், திரையரங்கில் வசனம் ஒலிக்கும். ரயில், வண்டிகள் என எல்லா சத்தமும் உண்டு. ஆனால், கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ள மாட்டார்கள். அதற்காக சைகையிலேயே பேசிக்கொண்டிருக்கும் அபத்தங்களும் இல்லை. ஆனால், நமக்கு எல்லாமே புரியும். வாழ்க்கையில் நாம எதிர்கொள்ளும் அன்றாட அபத்தங்களை சொல்லாமல் காட்டும் வித்தை இந்தப் படம். சார்லி சாப்ளினின் City  Lights படத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்டது என்றாலும் இந்தப் படத்துக்கு என தனித்துவங்கள் உண்டு. வானொலியில் ஒலிச்சித்திரங்கள் கேட்டு பழக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இப்படியான மௌனப்பட முயற்சி அசாதாரணமானது.  

ஏழை பணக்காரர் காதல், பழிவாங்கும் கதை, ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரிப்பது, கடவுளுக்கும் தீயசக்திக்குமான சண்டை, சாப விமோசனம் கதை, கூடு விட்டு கூடு பாயும் கதைகள் என இவை யாவும் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்கு சொல்கிற கதைகள் தான். ஆனால், அதை நம்பவைக்கும் விதத்தில் நேர்த்தியான கதை சொல்லலின் மூலம் சொல்லிவிடுவார். 

காமிக்ஸ், சார்லி சாப்ளின், இசை , புதிய தொழில்நுட்பம் இதற்கெல்லாம் ரசிகர் சிங்கீதம். இவருடைய படங்களில் இவையெல்லாம் ஒன்று கலந்தால் எப்படி இருக்குமோ அதைப் பார்க்க முடியும். மிட்செல் கேமரா காலத்தில் உதவி இயக்குநராக சேர்ந்து இந்தியாவின் முதல் டிஜிட்டல் கேமரா  (முதல் சென்சார் சான்றிதழ்) திரைப்படமான மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்கு இயக்குநரானவர். 

தெலுங்கில் மயூரி மாதிரியான படம் எடுத்திருக்கிறார். சுதா சந்திரன் நடித்து பிரபலமான இந்தப் படத்துக்கு 14 நந்தி விருதுகள் கிடைத்தன. யதார்த்த களம் என்றாலும், இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என்கிற வித்தியாசமான கதைக்களமாக இருந்தாலும் அந்தந்தக் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அவர் பல அடுக்குகளை சேர்த்துக் கொண்டே இருப்பார்.  

ஒரு இயக்குநர் தன கதைக்கான நடிகரை எதிர்பார்த்திருப்பது போல, நடிப்புக் கலைஞர்களும் தங்களுக்கான இயக்குநருக்காக எப்போதும் காத்திருப்பார்கள்.   ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, திரைக்கதையாசிரியராக கமல்ஹாசன் புதிதாய் யோசிக்கும்போதெல்லாம் சிங்கீதம் சீனிவாசராவையே முன்மொழிந்திருக்கிறார். இருவருடைய அலைவரிசையும் ஒத்திருந்ததால் இந்திய சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாய் படங்கள் கிடைத்தன. 

சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசன் அவர்கள் சிங்கீதத்துடனான கலந்துரையாடலை ஏற்பாடுசெய்திருந்தார். ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற அந்த நிகழ்வில் சிங்கீதம் அவரது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கருப்பு வெள்ளை காலத்தின் ஸ்டுடியோ அமைப்புத் தொடங்கி தற்போதைய AI, VFXவரையிலான தொழில்நுட்பங்களையும், கதை சொல்லும் முறைகளையும் அவர் சொன்னவை சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்குமானவை. 

ஹாலிவுட்டில் நடிகரும் இயக்குநருமான கிளின்ட் ஈஸ்ட்வுட் 90 வயதுக்கும் மேலாக படம் இயக்கிக் கொண்டிருப்பவர். அவருக்கு இணையான சாதனையை வேறு யாரும் செய்ததில்லை. நம்மிடையே அதைச் செய்யக்கூடியவராக சிங்கீதம் இருந்தார். 70 வருட காலம் இந்திய சினிமாவின் ஒரு அங்கமாக இருந்த சிங்கீதம் நமக்கு சொல்லிச் சென்ற ஒன்று இருக்கிறது “எது உங்களை வசியம் செய்கிறதோ, ஈர்க்கிறதோ அதை நீங்கள் உள்வாங்கும்போது உங்களுக்கான பாதையை அதுவே திறந்து காட்டிவிடும். அதற்காக தனியாக சிந்திப்பது, மெனக்கிடுதல் என்பதெல்லாம் மறைந்து போய் உங்களுக்குள் இருந்து அதுவே மலரும்” என்பது.

இந்த அனுபவப் பாடத்தை சிங்கீதம் என்கிற ஆசானால் மட்டுமே சொல்ல முடியும். ஏனெனில், சிங்கீதம் சீனிவாச ராவ் அப்படித்தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026
singeetham

கற்பனாவாதி Unlimited

November 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?