The Talkie
Sunday, November 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home தொடர்கள் கரு உரு

கரு உரு 06

The Talkie by The Talkie
November 1, 2026
in கரு உரு, தொடர்கள்
A A
0
Karu uru
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon நாராயணி கண்ணகி

கொரோணா காலத்தில்தான் இந்தத் தொடரை முகநூலில் தொடங்கினேன். பிரபல வார இதழின் ஆசிரியர் “கதை விவாத அனுபவம் ரொம்ப நல்லா இருக்கு… முகநூலில் எழுதாதீங்க.. கொஞ்ச வெயிட் பண்ணுங்க நான் சொல்றேன்” என்றார். 

அதனால் முகநூலில் எழுதுவதை நிறுத்தினேன். கொரோணா காலத்தில் பத்திரிகைகள் நின்று விட்டதும், நிற்காத பத்திரிகைகளில் இருந்து ஆசிரியர்கள் நிறுத்தப்பட்டதும் உங்களுக்குத் தெரியும். 

கதைவிவாதம் மதுவருந்தும் பார்களில் தான் அதிகமாக நடப்பதாக, வீடியோ காலில் காங்கேய நல்லூர் காளையைப்போல் சீறிப்பாய்ந்தார் திரைத்துறை நண்பர் ஒருவர் “என்னடா பெருசா டீக்கடை முன்பு டிஸ்கசன் பண்றாங்கன்னு எழுதற டிக்காஷன்தான் பண்ணுவாங்க… பிரபா ஒயின்ஸ்தாண்டா எங்களுக்கு தலைமைச் செயலகம் தெரியுமா?” என்றார். 

“தெரியாதுண்ணே”

“பிரபா ஒயின்ஸ் தெரியாம நீ என்னாடா சினிமாக்காரன் டிஸ்கசன் பத்தி எழுதற”

“தெரிஞ்சுக்கிறேன்”

“டேய் நாங்கள்லாம் ஊட்டி போனாலும், சிங்கப்பூர் போனாலும், அமெரிக்கா போனாலும் அங்கிருக்கிற பிரபா ஒயின்ஸ்லதான் டிஸ்கசன் பண்ணுவோம். சரக்கு உள்ள போனாதான் சரக்கு வெளியே வரும்”

“இப்ப எங்கணா கெடச்சது சரக்கு?” (கோவிட் கால மது விலக்கு) 

“மில்ட்ரி ஃப்ரண்டு தெரியும்ல வெச்சிருந்தான்! ஆபத்துக்கு ஒதவறதுக்கே அண்ணங் ஃப்ரண்ட்ஸ் வெச்சிருக்காண்டா”

“அண்ணா ஒண்ணு சொல்லட்டா… உங்ககிட்ட நிறய்ய சரக்கு இருக்கு, பத்து வருசத்துக்கு தேவையான சினிமாவ மண்டயில வெச்சிருக்கீங்க சரக்குல மூழ்கறத விடுங்களேன்”

அண்ணன் பச்சையா பேச ஆரம்பித்தார். 

கட்

கதை விவாதம் வாசித்து விட்டு சிலர் உள் பெட்டிக்குள்ளும், வீட்டிற்கே வந்தது போல் வந்தார்கள். 

கை குலுக்கினார்கள், தலையில் கொட்டினார்கள்,_அதில் மோதிர விரலும் ஒன்று_அவருக்கு என் மரியாதைக்குரிய நமஸ்காரம். “எனக்கு டிராவல் பண்ணாத்தான் ஸீன்ஸ் வரும், காரை எடுத்துட்டு நண்பர்களோட பெங்களூரோ, ஐதராபாத்தோ, கோவையோ பேசிண்டே போய் பேசிண்டே திரும்பிடுவோம்” என்றார்

இன்னொரு ப்ரோ “ப்ரோ! எனக்கு பாத்ரூம்ல ஒக்காந்து இருக்கும் போதுதான் சூப்பர் ஐடியா வந்து விழும். ஒரு க்ளைமேக்ஸ் ஸீனுக்கு மூனு மாசம் ரூம் போட்டு முக்கினோம் வரல, பாத்ரூம்ல ஒக்காந்துனு யோசிச்சப்பதான் செம ஸீன் வந்துச்சு”

“ப்ரோ! மூனு மாசத்துக்கு முன்னயே நீங்க பாத்ரூம் போய் முக்கி இருக்கலாமே…”

“ஆமா ப்ரோ மூனு மாசமா பாத்ரூம் போகாமயா இருந்தீங்க?” என்று கேட்கவில்லை. 

திரைக்கதையில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதுதான் மிகவும் முக்கியமானது. கதாநாயகனை, கதாநாயகியை, அவர்களின் குடும்பத்தை, சுவாரஸ்யமான ஒரு சம்பவம் மூலம் அறிமுகம் செய்ய வேண்டும். பெரும்பாலான கதைகளில் முதலில் கதாநாயகனை அறிமுகம் செய்வார்கள். 

நாயகன் என்றால் பத்தரைமாத்து தங்கம்! நல்லவன் என்றால் அவன்தான் உலகத்திலேயே நல்லவன், உயிரே போனாலும் அவனுக்கு கெட்ட சிந்தனைகள் வராது. (பாட்டில் மூடியை வாயில் கடித்துத் துப்பி விட்டு சரக்கு அடிப்பது, பத்துப் பேரின், நூறு பேரின், ஏன் ஆயிரம் பேரின் எலும்புகளை உடைப்பது, ஸ்டைல் ஸ்டைலாக தம் இழுத்து திரை முழுவதும் புகை விடுவது, கதாநாயகியை அவமதிக்கும் கிருஷ்ண லீலைகளில் ஈடுபடுவது என்று மேற்கண்ட எல்லாமே கதாநாயகன் செய்வார்.) கதாநாயகன் நல்லவர்! வல்லவர்! 

சரி, வில்லர்கள் என்ன செய்வார்கள்? 

ஹீரோ இனங்கள் என்னென்ன பண்ணுகிறதோ அத்தனை பிரதாபங்களையும் வில்லர் ஈனங்களும் பண்ணும். விதவிதமாக மனிதர்களை வெட்டுவது, புகைப்பது, குடிப்பது, அரையாடையிலிருக்கும் பெண்ணோடு (அ) பெண்களோடு கலவியில் இருப்பது. என்னதான் வில்லனாக இருந்தாலும் இருபத்தி நான்கு மணி நேரமும் கலவியிலேயே இருக்க முடியுமா? என்று கேள்வி கேட்க கூடாது. என்ன? பதிலுக்கு ஹீரோ ஹீரோயினோடு டூயட் பாடி, ஆடுவார். 

நாம் பழகிக் கொண்டது, அல்லது நம்மை சினிமாக்காரர்கள் பழக்கப்படுத்தி வைத்திருப்பது என்னவென்றால்? ஒரு விச(ய)த்தை ஹீரோ பண்ணா ஹீரோயிசம்! அதே விசேசத்தை வில்லன் பண்ணா வில்லத்தனம். 

ஹீரோ அம்மா மீது பாசமாக இருப்பான். அண்ணன், அக்கா மீது பாசமாக இருப்பான். தம்பி, தங்கை மீது பாசமாக இருப்பான். நண்பன் மீது பாசமாக இருப்பான். காதலி மீது மேலும் அதிகமாக பாசமாக இருப்பான். திரைப்படங்களில் ஹீரோ யார் மீது அதீத பாசமாக இருக்கிறாரோ அவர்களுக்கு வில்லனால் ஆபத்து என்பது மாற்றற்ற விதி! 

ஹீரோவுக்கும், வில்லனுக்கும் வேறு எந்தக் காரணத்திற்காகவோ கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கும். அந்தக் காரணத்தை விட்டுவிட்டு வில்லன் ஹீரோவின் நண்பனையோ, தம்பியையோ, அம்மாவையோ, மனைவியையோ, கொன்று விடுவான். அரிதாக காதலியைக் கொல்வான். வேறு வழி இல்லாமல் வில்லன் ஹீரோவின் காதலியைக் கொன்று விட்டால் இன்னொரு கதாநாயகி வந்து விடுவார். அவ்வகைப் படங்களில் இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள். 

இயக்குனர்கள் ஹீரோயினை மட்டும் அரிதாகதான் கொல்வார்கள். ஏனென்றால் படத்தில் நிச்சயமாக இரண்டு டூயட் வேண்டும். பெரும்பாலான  திரைப்படங்களில் ஹீரோயின் என்கிற பாத்திரம் இருப்பதே டூயட்டிற்காகத்தானே? அடுத்து ஹீரோ படம் முழுவதும் போராடி வில்லனை ஜெயித்த பிறகு க்ளைமாக்ஸில் ஓடி வந்து கட்டிப் பிடிப்பதற்கு ஹீரோயின் உயிரோடு இருந்தே ஆக வேண்டும். அதனால் கொல்ல மாட்டார்கள். மொத்தப் படத்தையும் கொன்றாலும் நாயகியை கொல்ல மாட்டார்கள். 

ஏ.ஆர்.முருகதாஸின் கஜினி படத்தில் கதாநாயகியை வில்லன் கொன்று விடுவான். மையக்கருவே அதுதான். காதலியைக் கொன்றவர்களைப் பழி வாங்குவதே கஜினியின் ஹீரோயிசம்! அந்த மையக் கதையோடு சினிமாக்களால் தீராத சமூகப் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன. (சினிமாவில் மட்டும்தானே எப்பேர்ப்பட்ட சமூகப் பிரச்சினைகளும் தீரும்) ஏதாவது ஒன்றை சேர்க்க வேண்டும். 

எனவே… கதை உருவாக்கும் வல்லுநர்கள் சமூகப் பிரச்சினைகளையும் நீளமாக பட்டியல் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பாவம் ஹீரோ! பாகிஸ்தான் தீவிரவாதிகளையே எவ்வளவு படங்களில் ஒழிப்பார். போதைப்பொருள் கடத்தல், குழந்தைகளைக் கடத்தல், இளம் பெண்களைக் கடத்தல், மந்திரி கொள்ளை அடித்து மறைத்து வைத்திருக்கும் ஐநூறு கோடி ரூபாய்களைக் கடத்தல். இப்படிப்பட்ட கடத்தல்களைத் தனி ஒருவனாக போராடி முறியடிக்க வேண்டும். 

 அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது, இயற்கையை நாசமாக்கி, ஊர் மக்களின் உயிரைக் குடிக்கும் தொழிற்சாலைகளை வருவது, உயிர் காக்கும் மருந்தில் கலப்படம் செய்வது, போன்ற தீய சக்திகளைத் தடுப்பதற்கு ஆக்சன் ஹீரோக்களை விட்டால் இந்த உலகில் யார்தான் இருக்கிறார்கள்? இந்த மாதிரி ஆயிரம் ஹீரோயிச வேலைகள் இருக்கின்றன ஹீரோக்களுக்கு. 

ஆயிரம் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் நூறு சமூக விரோதங்களையாவது கதைக்காரர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். செல்ஃபோன் டவர்களால் குருவிகள் இனம் அழிந்து வருவது, பெண்களின் வயிற்றில் கருக்கள் கலைவதற்கு என்னென்ன நவீன மின்னணு பொருட்கள் காரணமாக இருக்கிறன என்று பட்டியல் சேர்த்து வைக்கலாம். ஒரு காலத்தில் ஹீரோ எதிர்த்து போராடுவதற்கு வரதட்சிணை கேட்கும் தங்கையின் கணவன், சொத்தை ஏமாற்றும் பங்காளிகள், தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்காமல் ஏமாற்றும் முதலாளி, கோயில் சொத்தை ஏமாற்றும் பண்ணையார் என்று ஹீரோ போராடுவதற்கு நிறைய விசயங்கள் இருந்தன. அந்த விசயங்கள்தான் இப்போது நவீன மயமாகி இருக்கின்றன. 

கதைக்கு ஒரு ஹீரோ வேண்டும். ஹீரோ போராடி வெல்வதற்கு ஒன்றோ, ஒன்றுக்கு மேலோ பிரச்சினைகள் வேண்டும். அந்தப் பிரச்சினைகள் புதியதாக இருக்க வேண்டும். (ஹீரோ என்னவோ அரத பழசான கேசுதான் என்றாலும்) . 

தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் இதுதான் என்று முடிவான பிறகு. ஹீரோ என்ன தொழில் செய்கிறார் என்பது முக்கியம். அவர் அந்தத் தொழிலே செய்யவே மாட்டார் என்பதுதான் நிதர்சனம். ஆனால் படத்தில் ஒரு நிமிடமாவது அவர் தொழில் செய்ய வேண்டும். 

ஆக்சன் ஹீரோ என்றால் பெரும்பாலும் நீதிபதியாகவோ, டாக்டராகவோ இருக்க மாட்டார். 

போலீஸ் அதிகாரியாக, அல்லது நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்த காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவராக இருப்பார். அல்லது ராணுவ அதிகாரியாக இருப்பார். 

இளம் வயது ஹீரோ என்றால் காவல் துறை வேலைக்கு முயற்சி செய்பவராக இருப்பார். 

அதிகாரியாக இல்லாமல் டாக்ஸி டிரைவர், ஆட்டோக்காரர், மூட்டைத் தூக்கும் கூலி, வாத்தியார் (ஆசிரியர் என்று சொல்வது குற்றமாகும்), கார் மெக்கானிக், டூவீலர் மெக்கானிக், பிஸினஸ் மேன், விளையாட்டு வீரர், பணக்காரரிடம் பணிபுரியும் தொழிலாளி, ரௌடி, இதுபோல் ஹீரோ செய்யும் வேலை நூற்றுக்கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுவரை எந்த ஹீரோவும் செய்யாத புதிய வேலையாக இருந்தால் நல்லது. 

இளம் வயது ஹீரோவாக இருந்தால் கல்லூரி மாணவர், அல்லது வேலை தேடி அலைபவர், அல்லது விளையாட்டு வீரர்! விடலைப் பருவ கதாபாத்திரங்கள் என்றாலே அந்த ஹீரோ பெற்றோரை ஏமாற்றி பணம் பிடுங்குவார். நண்பர்களோடு குடிப்பார், வம்பு சண்டைக்குப் போவார். பெண்கள் பின்னால் சுத்துவார். திடீரென அப்பாவோ, அம்மாவோ இறந்ததும் பொறுப்பானவர் ஆகி விடுவார். 

ஹீரோ என்னத் தொழில் செய்கிறார் என்று முடிவு செய்துவிட்டால் போதும். அவர் தொழில் செய்யும் இடத்தில் அவரின் அறிமுகக் காட்சியை வைக்கலாம். கூடவே அவர் எந்த பிரச்சினையைத் தீர்க்க போகிறார் என்று முடிவு செய்து விட்டால் அந்தச் சமூகப் பிரச்சினையையும் இணைத்து ஹீரோ அறிமுகம் வைக்கலாம். 

எப்படி? 

_விரிவாக அடுத்த மாதம்

Author Image

நாராயணி கண்ணகி

ஸீரோ டிகிரி நாவல் விருதாளர். வாதி, அலர், தப்பு ஆகிய நாவல்களின் ஆசிரியர். திரைக்கதை உருவாக்கத்தில் பங்கெடுப்பாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 - திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026
singeetham

கற்பனாவாதி Unlimited

November 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?