The Talkie
Sunday, November 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home கட்டுரைகள்

நேர்கையில் நிகழும் சொற்பதம் – கே.ஆர். ராமசாமி

The Talkie by The Talkie
November 1, 2026
in கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள்
A A
0
K.R.Ramasamy
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon க.சீ சிவகுமார்

மிதிவண்டி அழுத்திப் போன எல்லாப் பகல்களும் கோடைகாலங்களாகவே ஞாபகத்தில் இருக்கின்றன. மாமாவின் ஊரில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த ஒரு வருடத்தின் ஒரு  விடுமுறை நாள் ஒன்றில் சைக்கிள் எடுத்துக்கொண்டு பெரியம்மா மகனான அண்ணனைப் பார்க்கச் செல்கிறேன்.சைக்கிள் கோடந்தூரைக் கடக்கிறது. அந்த வட்டாரத்தில், ‘கோயில் பெருத்தது கூடலூர். நாடகம் பெருத்தது கோடந்தூர்’ என்று சொல் உண்டு.

கோடந்தூரை அடுத்து, முதலிக் கவுண்டன் புதூர். அங்கு நிலத்தடி நீர்த் தொட்டியின் கீழாக ரோசாக் கலர் சினிமா போஸ்டர். சின்னதாராபுரம் அமராவதி திரை அரங்கத்தின்  ஆட்டம் அறிவிக்கும் தாள் அது. கறுத்த தடித்த எழுத்துக்களில் விவரங்கள். சைக்கிளை நிறுத்தி விலா எலும்ம்புக்கு அண்டை கொடுத்து போஸ்டரைப் பார்த்ததில், ‘செந்தாமரை’ என்பது படத்தின் பெயர் எனத் தெரிகிறது. நடிகர் பட்டியிலில் முதற்பெயரைத்தாண்டி என் கண்கள் பயணிக்கவில்லை.

 ‘கே.ஆர். ராமசாமி.’ கண்களைக் கட்டிவைக்க இதுவே போதுமானதாக இருந்தது. ஊரில் என்னிலும் வயதான உணவகத்தை நாளது தேதிவரை ’சிவகுமார் ஹோட்டல்’ என்னும் பெயரில் இயக்கிவருபவர் என் பெரியப்பா. இன்று வரை பீடி சிகரெட்டும் கூல் ட்ரிங்ஸ்களும் விற்பதில்லை என்னும் கொள்கை முழக்கமும் அதில் அடக்கம். சின்னஞ் சிறே பாலகனான என்னை மொங்க நல்லாம்பாளையத்துக்கு நாடமொன்றுக்குக் கூட்டிப்போய்விட்டு அந்திக் காலைக் கருக்கிட்டில் அவரது கழுத்தின் மீது கவட்டை போட்டு அமர்ந்து தலை உச்சியைப் பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்ததால் ‘ட்ராமா சாமி’யாகவும் இருக்கிறார்.

பழைய படம் புதுப் படம் என்கிற பேதம் அப்போதும் இப்போதுமில்லை.அப்போதெல்லாம் வாராவாரம் சினிமா பார்க்கப் போய்க்கொண்டுதான் இருப்பேன். அந்த வாரம் முத்தனம் பாளையம் போய்விட்டதால் கே.ஆர்.ஆரின் படம் பார்க்கமுடியவில்லை. முதலும் கடையுமாக முதலிக் கவுண்டன் புதூரில் போஸ்டர் பார்த்த  -1985களின் – அந்த நாளுக்குப் பிறகாக கே.ஆர்.ஆரின் போஸ்டரையும் பார்க்கவில்லை. படங்களும் பார்க்கக் கிட்டியதில்லை. செந்தாமரை ஏனோ மறுபடி மலரவேயில்லை.

நடிப்பிசைப் புலவர்.

இயல், இசை, நாடகம் என முத்தமிழும் முயங்கும் பெயர் அவருக்குப் பட்டமாக வாய்த்துவிட்டது. இசை நடு நாயகமாக அதனது ஸ்தானத்தில் இருக்க நாடகமும் எழுத்தும் நாற்காலி மாறி அமர்ந்தபட்டம்.

இந்திய விடுதலைக்கு முன்னரே (ராபின்சன் பூங்காவில் கழகம் தோன்றும் முன்னரே) ‘மேனகா’வில் அறிமுகமாகி  பூம்பாவை உள்ளிட்ட படங்களில் கே.ஆர்.ஆரின் இருப்பு நிலைப்பட்டுவிட்டது.

நாடகம், திரைத்துறை இரண்டிலும் கால் பதித்த அறிஞர் அண்ணாவின் பிரியத்துக்குரியவராக கே.ஆர்.ஆர் இருந்தார்.

 ஓர் இரவு,வேலைக்காரி ஆகிய படங்கள் (மற்றுமவற்றின் சில மறக்க முடியாத பாடல்கள்.) திரைப்படங்களாக இன்று அறியப்படும் அவை நாடகங்களாக உருப்பெற்றுத் துலங்கியபோதே ராமசாமி நடிக்கத் தொடங்கிவிட்டார்.(இதில் ஓரிரவு கதையை எழுத சி.என்.ஏவுக்கு ஓரு இரவு மட்டுமே தேவைப்பட்டது என்னும் பேச்சு உண்டு.வேலைக்காரி படம் பற்றி இப்படியான சுவாரசியத் தகவல்கள் ஏதும் இல்லை.)

ராமசாமிகளை சி.என்.அண்ணாதுரை நேசித்தே ஆகவேண்டும்.ஆத்திக,நாத்திக, ஒன்றே குலத்து ஒருவனே தேவன் என அனைத்துக்கோட்பாட்டிலும் இதுவே விதி.

இன்றும் என்.பி.கே.ஆர்.ஆர் மாளிகை என்று கட்டடம் எதையும் பார்த்தீர்களானால் அது கே.கே.எஸ்.எஸ்.ஆருக்குச் சொந்தக் காரரோ என மயங்காமல் நடிப்பிசைப் புலவரின் பெயரிலானது எனப் புரிந்துகொள்ளவும்.

தமிழில் சமகால சமூகக் கதைகளின் நாயகன்களின் முன்னோடிகளில் ஒருவரான ராமசாமிக்கும் காலண்டர் வந்த நாட்கள் இருந்தன.குறிப்பாக எம்.ஜிஆருக்கு ‘போர் வாள்’ காலண்டர்களின் காலத்தில். எம்.ஜி.ஆரின் வாள் மின்னியது. கே.ஆர். ஆர் எங்கேயோ பின்தங்கினார். எம்.ஜி.ஆரின் வாள் எம்.என். நம்பியாரைச் செயித்ததெல்லாம் சும்மா. கல(ர்)ப்பட வாள். பி.எஸ்.வீரப்பாவை வென்றதுதான் அவரது முக்கியக் கட்டம் என நினைக்கிறேன். அது நிற்க.

கே.ஆர்.ஆருக்கு நளினமான தோற்றம்.புஜபல பராக்கிரமனாகவும் காட்சியளிக்கமுடியாது. நலிந்த கலைஞ்ராகவும் காட்சியளிக்கமுடியாது.லேசாக லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனை நினைவூட்டும் தோற்றம்.கன்னக் கதுப்புகள் லட்சியத்தினதும் குறைவான சதையை உடையன.

.(ராஜேந்திரனின் கன்னக் கதுப்புக்கும் குழிக்கும் உலகின் எவையும் ஈடாக மாட்டா.)

ராமசாமியின் குரல் நட்புத் தொனிக்கும் சரள சகஜ பாவமுடையது.ஆழத்தின் பொருண்மையை அகடுமுகடுகளின் அலை அசைவில் காட்டி பரவசத்தில் உட்கார்த்தும் தன்மையுடையது.

’உள்ளம் தேடாதே என்று சொல்லுதே…. என்ன சொன்னாலும் கண் தேடுதே…’ என எஸ்.ஜானகியுடன் ‘எதையும் தாங்கும் இதயம்’(1962) படத்தில் பாடியபாட்டு சுட்டென ஒரு உதாரணம்.

பாடல் அபூர்வமான ஞாபக மனதின் அசைபோடுதல்களுக்கு வகைப்பட்டுவிட்டாலும் படத்தின் தலைப்பு என்னவோ தமிழ்மனதில் 50 ஆண்டுகள் அரியாசனத்தில் சம்மணம்போட்டுவிட்டது.

’சுகம் எங்கே’ படத்தில் ஜிக்கியுடன் ’மதனா எழில் ராஜா’ என்னும் பாட்டும் செந்தமிழ் நாட்டு சோலையிலே என்னும் பாட்டும் மறக்கவொண்ணாதன.. இவற்றில் ராமசாமியுடன் பிம்ப அசைவு சாவித்திரி.  ‘செந்தமிழ்நாட்டு சோலையிலே…’ ராமசாமி, ’தென்றலடிக்குது என்னை மயக்குது..தேன்மொழியே இந்த வேளையிலே’ என்று பாடும்போது கிர்றங்கடிக்கிறது.  கண்ணையும் காதையும் கட்டுகிற சில லயங்கள் அவ்வப்போது நேர்கிறதில்லையா? அப்படியொருபாடல் அது..

 ‘கண்ணில் தோன்றும் காட்சியாவும்..’ என்றொரு பாடலை கட்டிய வேட்டிக்குள் சட்டையை இன் பண்ணிக்கொண்டு வந்து பாடுவார் பாருங்கள் சுகம் அங்கேயிருக்கிறது. ஆனால் அப்படியான உடையமைப்பு முந்தின நாளின் தூக்கக் கெடுதி, ஏக்கம் மிகுதி மற்றும் தன்னிலை தளந்த நிலை ஆகியவற்றினூடேயே சாத்தியம்.

அவரது அசைவுகளைப் பார்க்கையில் ஒரு விஷயம் புலப்பட்டது. நாடகக் காரர்களின் அசைவு (அடவு) ஒரு பக்கம் இருந்தாலும் காதற்காட்சிகளில் அவரது தோள்மொழி ஒரு பதினெட்டிருபது வயசுப் பையன்போலவே இருக்கிறது. அது அத்தனை காந்தமாயும் பாந்தமாயும் இருக்கிறது.

நாடகக் காரராயிருந்ததுகொண்டு டி.எம்.எஸ்சின் குரலோடு வலாம் வரும் டி.எஸ்.பாலையாவோடு பெண்வேஷம்து தரித்துக்கொண்டு  ‘தந்தனத்தாம் பாட்டுக்காரி சிங்காரி’யாக அவரால் வர முடிந்திருக்கிறது.(பாடல்: உருவம் கண்டு என் மனசு உருகுது.)இதே ‘நீதிபதி’ படத்தில் ‘பறக்குது பார்… பொறி பறக்குது பார்…’ என ஸ்பார்க்ளிங்கான பாட்டு உண்டு. கே.ஆர்.ஆர் கத்திக்கு சாணை பிடித்துக்கொண்டே பாடுவதால் பாட்டுக்கு கூர் ஏறுகிறது.

திராவிட எழுச்சியில் ஒப்பற்ற பங்குதாரரான பாவேந்ந்தரின் பாடல் ஒன்று ’ஓர் இரவு’ படத்தில் வருகிறது. எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடுகிறார். ராமசாமிக்கு வேலை பாடலினைக் கோருவதும்(கண்ணே அந்தப்பாட்டு!) பாடலின் போது இடையீடு செய்வதும்தான்(கண்ணே…. மாட்டாயா)

சொல்லிசை அளபெடை துள்ளிமறியும் இடையீடுகள் அவை.

பாடல் என்னவென்றால் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’

இந்தப் பாடல்குறித்து இரண்டு சந்தேகங்கள் எனக்கு. ஒன்று, இந்தப் பாடலை அறிந்தவர்கள் ஏன் பாடிக்காட்டுவதற்கு அத்தனை பிகு பண்ணுகிறார்கள்? (மாட்டாயா மாட்டாயா எனக் கெஞ்ச வைத்துவிடுவார்கள்.) இரண்டாவது, கவிஞர் ஏன் துன்பம் நீக்க மாட்டாயோ அல்லது போக்க மாட்டாயோ என எழுதவில்லை.என்ன மாத்திரை குறைந்து போயிற்று?

பிறகு ஒரு வழியாக நானே சிந்தித்து அது பூரிதக் கரைசல் மாதிரி என முடிவுக்கு வந்தேன். பூரிதக் கரைசல் அல்லது கலவை. துன்பத்தோடு இன்பத்தையும் கொட்டி நிரப்பி பாத்திரத்தை நிரப்பிவிட்டாம் அப்புறம் புதிதாக வாதை எதுவும் நம் கூடாரத்தை அணுகாதல்லவா?

மீண்டும் செந்தாமரைக்கு வருவோம். அதில் ராமசாமி பத்மினியைப் பார்த்தவாறு ‘பாடமாட்டேன் நான் பாடமாட்டேன்.கலை பாவலர் செய்த பாட்டன்றி வேறெதையும் பாடமாட்டேன்’ எனப் பாடுகிறார்.

பாட மாட்டேன் நான் பாடமாட்டேன்னு ஒரு ஆள் பாடலாமா?- நான் பாடும் மவுன ராகம் கேக்கவில்லையாங்கறதவிட இது கொடுமையால்ல இருக்கு – அதனாலதான் உனக்கு அப்புறம் அவரு படப்போஸ்டர் கூடப் பார்க்கக் கிடைக்கல என்கிறார் ஒருவர்.

’இன்னம் நீ ராமசாமியைப் பத்தி எழுதலியாடா நீ. இருபத்திரெண்டு பாட்டு வச்சிருக்கேன்.கொங்கன் குளத்துக்கு வா தர்றேன்.’’ என்கிறான் குன்னாங்குன்னாங்குர்ர்ர் சி.செல்வம்.

‘’மெயில்ல அனுப்பிச்சு வைக்க முடியாதா?’’

‘’ முடியாது. 22ஆந்தேதி தம்பிக்குக் கல்யாணம்.வந்தா 22 பாட்டையும் காப்பிபண்ணித்தர்றேன்.’’

கல்யாணம் முப்பதாம் தேதியாக இருந்தால் மேலும் மகிழ்ச்சிதான். அவன் தனது வீட்டு மாடியை நிலையமாக்கி என் தோட்டத்து நிலாமுற்றத்துக்கு அர்த்த இரவில் மூன்று முழுப்பாடல்களை செல்வன் ஒலிக்கவிடுகிறான்.என் செல்போனே  எனது வானொலிப்பெட்டியுமாக ஆகிறது.’சிவா! டே கேள்றா!கேட்டாயா?’

தமிழின் முதல் சமூகப் படமான மேனகாவில்(1935)- தனது முதல்படத்திலேயே ராமசாமிக்கு பைத்தியக்காரவேஷம்தான்-. நாம் இன்னும் பலதை அனுபவிப்போம் செல்வ!

சந்தடியும் சந்தையடியுமாயிருக்கிற வாழ் வாள் வால் நிலையில் 22ஆம் தேதிபற்றி உத்தரவாதங்கள் ஏதுமில்லை.நானும் திருமணத்துக்குப் போகாமல் ஒரு மாசிமாச – இங்லீஷ் இருபத்துமூன்றில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். கும்பகோணத்துக்காரர் என்பதால் ராமசாமியின் பாடல்கள் மாமாங்கத்துக்கு ஒருமுறை வானொலி அல்லது வான் வழிகளில் கிடைப்பது வழக்கம். மற்றபடி  ஒரே டிராஃபிக்தான். ட்ராஃபிக் ராமசாமிக்கும் இனிஷியல் கே.ஆரா இருந்தால் நான் என்ன செய்வது? அடங்கப்பா என்பது போல ’அட எங்க பெரியப்பா!’ என செல்வச்சிணுங்கல் போடவேண்டியதுதான்.

Author Image

க.சீ சிவகுமார்

எழுத்தாளர். இன்று நம்மிடையே இல்லை. சில வருடங்களுக்கு முன்பு அவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்று இது.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Deva

தலைமுறைகளின் தேனிசை

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026
singeetham

கற்பனாவாதி Unlimited

November 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?