The Talkie
Sunday, November 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home ஆளுமைகள்

தலைமுறைகளின் தேனிசை

The Talkie by The Talkie
November 1, 2026
in ஆளுமைகள்
A A
0
Deva
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon கா.ரபீக் ராஜா

இசையமைப்பாளர் தேவா அவர்களது மறைவையொட்டி ஏராளமான இரங்கல் செய்திகள் முகநூல் முழுக்க நிரம்பி கிடைக்கின்றன. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ஸ்டோரீஸ் என ஒட்டுமொத்த சமூக வலைதள அமைப்புகளும் தேவாவின் இறப்பை தங்களுக்குத் அறிந்த இசையுணர்வில் பகிர்ந்து வருகிறார்கள். பொதுவாய் சமூக வலைதளங்களில் எந்த சம்பவம் நடந்தாலும் அதை தனக்கு நெருக்கமாய் காட்டிக் கொள்வது போல இந்த இரங்கல் செய்திகள் இல்லை. எல்லா வகையிலும் தன்னுடன் தேவா அவர்களின் இசை பயணித்த தூரத்தை உணர்ந்த நேசம் அதில் கொட்டிக் கிடப்பதால் மற்ற இரங்கல் செய்திகளில் இருந்து இவை தனித்துத் தெரிகின்றன.. சில இசைகள் காதுகளில் தங்குகின்றன. சில இசைகள் நினைவுகளில் தங்குகின்றன. இன்னும் சில இசைகளோ ஒரு காலகட்டத்தின் வாழ்க்கையையே தங்களுக்குள் சுமந்து நிற்கின்றன. தேவாவின் இசை மூன்றாவது வகையைச் சேர்ந்தது.

என்னைப் போல எண்பதுகளின் மத்தியில் பிறந்தவர்கள் தேவாவை இன்னும் நெருக்கமாக உணர முடியும். ராஜா,  ரஹ்மான் ஆகியோரைத் தாண்டி தேவாவை எளிதாய் சொந்தம் கொண்டாட எல்லா உரிமையும் இருக்கிறது. 2026 அக்டோபர் 17 அன்று தேவா மறைந்த செய்தி வெளியானபோது, அது ஓர் இசையமைப்பாளரின் மறைவு என்ற அளவில் மட்டும் நின்றுவிடவில்லை. அவருடைய பாடல்களோடு வளர்ந்த ஒரு தலைமுறையின் நினைவுகள் மீண்டும் திறந்துகொண்டன.  

1992 தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில் முக்கியமான ஓர் ஆண்டு. மணிரத்னத்தின் ரோஜா திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் புதிய இசை அலையை உருவாக்கிக்கொண்டிருந்தார். அதே ஆண்டில் கே.பாலசந்தர் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை திரைப்படத்துக்கு இசையமைத்தார் தேவா. 1989 இல் தனது முதல் படத்திற்கு இசையமைத்தாலும் வைகாசி பொறந்தாச்சு படத்தில் பாடல்கள் பெரிய ஹிட் கொடுத்தாலும்  தேவாவின் விஸ்வரூபம் அண்ணாமலைக்கு பிறகுதான்! அது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை மட்டுமல்ல; அவருடைய இசை எத்தகைய திரை ஆளுமைக்குப் பொருந்தும் என்பதை நிரூபித்த தருணமும்கூட! ‘வந்தேண்டா பால்காரன்’, ‘வெற்றி நிச்சயம்’, ‘அண்ணாமலை அண்ணாமலை’ போன்ற பாடல்கள் வழியாக தேவா உருவாக்கிய இசை, ரஜினிகாந்தின் திரை ஆளுமையோடு இயல்பாகப் பொருந்தியது. ரஜினியின் உடல்மொழிக்கும் வசன உச்சரிப்புக்கும் நடைக்கும் ஏற்ற ஓர் இசை மொழியை அவர் உருவாக்கினார். குறிப்பாக, ‘வந்தேண்டா பால்காரன்’ பாடலில் இருந்த உள்ளூர் மணமும் துள்ளலும், தமிழ்நாட்டின் வெகுஜன ரசிகர்களிடம் உடனடியாகச் சென்றடைந்தன.

இங்கே தேவாவின் திறமையை நாம் கவனிக்க வேண்டும். ரஜினிகாந்துக்கு முன்பே பல இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தார்கள். அவருடைய திரை ஆளுமைக்கு ஏற்ற இசையை உருவாக்குவதில் இளையராஜாவுக்கும் முக்கியமான பங்கு இருந்தது. ஆனால், தேவா உருவாக்கிய இசையில் ஒரு தனித்துவமான  நகரத்து இயல்பும், பகுதியின் துடிப்பும், கொண்டாட்டத்தின் எளிமையும் இருந்தன. ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் எனும் பட்டம் உச்சமடைந்ததும் இந்த காலகட்டத்தில் தான்.  அதே காலகட்டத்தோடு தேவாவின் இசையில்  பல உடனடி  அற்புதங்களும் சாத்தியப்பட்டது.

அந்த வெற்றி பாட்ஷா திரைப்படத்தில் இன்னும் பெரிய அளவில் தொடர்ந்தது.

‘நான் ஆட்டோக்காரன்’, ‘ரா ரா ராமையா’, ‘ஸ்டைல் ஸ்டைல்தான்’ போன்ற பாடல்களையும், படத்தின் பின்னணி இசையையும் இன்று நினைவுகூரும்போது, தேவாவின் இசை ரஜினிகாந்தின் திரை ஆளுமையை எவ்வாறு வலுப்படுத்தியது என்பது புரியும்.  தேவா அவர்கள் ரஜினியின் மூன்றே படங்களுக்கு வேலை செய்தாலும் தேவாவின் சாயலும் ரஜினியின் ஆளுமையையும் என்னளவில் பிரித்து பார்க்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் தேவா ரஜினி சாயலில் இருக்கும் ஒரு இசையமைப்பாளர் என்றே சொல்வேன். அந்த அளவிற்கு சொற்ப படங்களில் இவர்கள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அதற்கிடையில் வெவ்வேறு படங்களில் தேவா நிகழ்த்திய இசை மாயங்கள் தனி.

ஒரு இசையமைப்பாளராக தேவாவின் காலங்கள் மிக முக்கியமானது. ராஜா, ரகுமான் எனும் இரு ஆளுமைகளுக்கிடையே தானும் ஒரு முக்கிய இசை ஆளுமையாக உருவெடுத்தது அவரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இளையராஜா ஏற்கெனவே தமிழ் சினிமாவின் இசை இலக்கணத்தையே மாற்றியிருந்தார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றைத் தனது தனித்துவமான இசை மொழியில் இணைத்து, பின்னணி இசையிலும் பாடல்களிலும் புதிய உயரங்களை உருவாக்கியிருந்தார். அவருடைய இசைத் தாக்கம் இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் ரசிகர்களிடமும் ஆழமாக வேரூன்றியிருந்தது. அந்தச் சூழலில் ரஹ்மான் வந்தார். புதிய ஒலித் தொழில்நுட்பம், மின்னணு இசைக்கருவிகளின் பயன்பாடு, அடுக்கடுக்கான ஒலியமைப்பு, புதிய குரல்களுக்கான வாய்ப்புகள் எனத் தமிழ் சினிமாவின் இசை அனுபவத்தையே அவர் மாற்றத் தொடங்கினார். இளையராஜாவின் இசையையும் ரஹ்மானின் இசையையும் போலவே தேவாவின் இசையையும் தனித்துவமான ஓர் இசை மொழியாகப் பார்க்க வேண்டும். அவருடைய நோக்கம் ஒவ்வொரு முறையும் இசை அமைப்பில் புரட்சியை நிகழ்த்துவது அல்ல. ஒரு பாடல் திரையில் ஒலிக்கும்போது அது உடனடியாக மக்களைச் சென்றடைய வேண்டும்; திரையரங்குக்கு வெளியே வந்த பிறகும் முணுமுணுக்கப்பட வேண்டும். இந்தத் தேவையை அவர் மிக நன்றாகப் புரிந்திருந்தார். இன்னும் சொல்லப்போனால் தேவாவையும் சேர்த்து இந்த தமிழ் சமூகம் மூன்று இசையமைப்பாளர்களின் வெவ்வேறு அணுகுமுறையையும் தங்கள் ரசனையாக மாற்றிக் கொண்டனர். இதே காலகட்டத்தில் தான் அரவிந்தன் படத்தின் மூலமாக 97ல் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.    

1996 தேவாவின் ராஜாங்கம் உச்சத்தில் இருந்த நேரம். அந்த வருடத்தில் மட்டும் சுமார் 24 படங்களுக்கு இசையமைத்திருந்தார் (வேறு சில சினிமா புள்ளி விவரங்கள் 36 படங்கள் என்கிறது). 24 என்பது ஒரு  எண்ணிக்கை மட்டுமல்ல. அதில் அத்தனை படைப்பாளிகளின் எண்ணங்கள், அணுகுமுறைகள், உணர்வுகள், பிரதிபலிப்புகள் என ஒரு பெரிய தொழிற்சாலையின் கலைப்படைப்பு சார்ந்தது. இன்றைய பார்வையில் அந்த எண்ணிக்கை ஆச்சரியமளிக்கலாம். ஆனால் அன்றைய தமிழ் சினிமாவின் தயாரிப்பு வேகம், பல்வேறு நிலைகளில் உருவான திரைப்படங்கள், இசையமைப்பாளர்களின் பணிச்சூழல் ஆகியவற்றை நினைத்துப் பார்த்தால், தேவா எத்தகைய வேகத்தில் இயங்கினார் என்பது புரியும். மொத்தத்தில் இயக்குனர்களின் இசையமைப்பாளராக அவர் இருந்திருக்கிறார். 

அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக கானா பாடல்கள் மூலம் தன்னை பிரகடனம் செய்தது தேவாவின் எளிய மனதிற்கு ஒரு பெரிய உதாரணம். கானா பாடல்களுக்கு புத்துயிர் கொடுத்தவர் தேவா, என்பதைக் காட்டிலும் கானா பாடல்களை முறைப்படி தமிழுக்கு சினிமாப்படுத்தியது அவரின் பங்கு முக்கியமானது. அடித்தட்டு மக்களின் ஆன்மாவை வணிகமய சினிமா மாற்றியதும் அவரே. விளிம்பு நிலை மக்களின் புறக்கணிக்கப்பட்ட பண்பாடுகளை தன் இசையின் மூலம் ஆவணப்படுத்திய ஆளுமை தேவா.  கானா பாடல்களை படத்துக்கு ஒன்றாய் முழுவதுமாய் அவர் அர்ப்பணித்த விதம் அபாரமானது. அதையொட்டி  பிரபுதேவாவும், தேவாவும் இணைந்த பாடல்கள் இப்பொழுதும் அட்டகாசமான கேட்கும் அனுபவத்தை கொடுக்கிறது. வெறும் இசையமைப்பாளராக இல்லாமல் ஒரு கலாச்சாரத்தின் பின்னணியை எந்த சமரசமுன்றி தரத்தோடு அர்ப்பணித்த   கலைஞனாக தேவா இருந்தார்.

அவரின் இசை உலகிற்குள் தேவாவும் பிரபுதேவாவும் ஒரு தனித்த அடையாளத்தில் இயங்கியது போல குறிப்பிடத்தகுந்த காம்பினேஷன், தேவா – ஹரிஹரன் இணைந்த பாடல்கள். ஹரிஹரனின் குரலில் உள்ள தனித்துவமான மெலிதான அரவணைப்பு  தேவாவின் சோகம் மற்றும் காதல் நிரம்பிய பாடல்களுக்கு உயிர் கொடுத்தது. குறிப்பாக, காதலின் தவிப்பு மற்றும் ஏக்கத்தை ஹரிஹரன் உச்சரித்த விதம் அபாரமானது. குத்துப்பாடல்கள் மற்றும் கானா பாடல்கள் என்ற பிம்பத்தை மாற்றி, அவராலும் உலகத்தரம் வாய்ந்த மெல்லிசைப் பாடல்களைத் தர முடியும் என்பதை ஹரிஹரனின் குரல் மூலம் நிரூபித்துக் காட்டினார். தேவாவின் இசையும் ஹரிஹரனின் குரலும் இணைந்தபோது உருவான பாடல்கள் வெறுமனே இனிமையான மெட்டுகளாக மட்டும் நின்றுவிடவில்லை. அவை ஒரு தலைமுறையின் காதல் நினைவுகளாக மாறின. 

தொண்ணூறுகளின் இறுதியில் காதல் பாடல்களைக் கேட்டுத் தங்கள் இளமையைக் கழித்தவர்களுக்கு, இந்தக் கூட்டணியின் பாடல்கள் இன்றும் மறக்க முடியாத அனுபவங்களாக இருக்கின்றன. அதிகம் யோசிக்காமல் மேலோட்டமாக ஆராய்ந்தாலே விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு இந்தக் கூட்டணி மறக்க முடியாத காதல் பாடல்களை தந்திருக்கிறது. கொஞ்ச நாள் பொறு தலைவா (ஆசை) – அஜீத், வண்ண நிலவே வண்ண நிலவே (நினைத்தேன் வந்தாய்) – விஜய், அவள் வருவாளா (நேருக்கு நேர்) – சூர்யா போன்றவை சில உதாரணங்கள். தேவாவின் இசையில் ஹரிஹரன் பாடிய பாடல்களைத் திரும்பக் கேட்பது என்பது பழைய ஹிட்களை நினைவுகூர்வது மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான இசைக் காலகட்டத்தை மீண்டும் அனுபவிப்பதும்கூட!

சில பெரிய இயக்குனர்களின் படமாக இருந்தாலும் தேவாவை மட்டும் முன்னிலைப்படுத்தி சில திரைப்படஙகள் கவனத்தைப் பெற்று இருக்கின்றன. 1997ல்  சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த ஆஹா திரைப்படம் அதில்  குறிப்பிடத்தக்கது.  புதிய இயக்குநர்களுக்கு நம்பிக்கையளித்தவர்

தேவாவின் இசைப் பயணத்தில் இயக்குநர் வசந்த், அகத்தியன், சேரன், எஸ்.ஜே. சூர்யா போன்ற இயக்குநர்களுடன் அமைந்த கூட்டணிகள் முக்கியமானவை. புதிய இயக்குநரின் பார்வையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற இசையை உருவாக்குவது ஒரு முக்கியமான திறமை. தேவா தனது இசைப் பயணத்தில் இதற்குப் பல உதாரணங்களைத் தந்திருக்கிறார். 

குறிப்பாக தேவாவின் பாடல்களில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.எஸ். சித்ரா, ஹரிஹரன் போன்ற முன்னணி பாடகர்களுடன் சேர்ந்து பல்வேறு குரல்களையும் கேட்க முடியும். குறிப்பாக அனுராதா ஸ்ரீராம் போன்ற பாடகர்களுடன் அவர் பணியாற்றிய விதமும் குறிப்பிடத்தக்கது. தேவா இறந்த பொழுது அனுராதா ஸ்ரீராம் அவர்கள் தனது துக்கத்தை வெளிப்படுத்திய விதம் அவர் மீதான மரியாதையை உருக்கமாக கூறியது. 

தேவா உச்சத்தில் இருந்த நேரம் அது. தீபாவளிக்கு ஐந்து படங்கள்  வெளியாகும் சினிமா பொற்காலம் அது. அதில் குறைந்தபட்சம் மூன்று படங்கள் இசையமைப்பாளர் தேவா பணிபுரிந்த படங்களாக இருக்கும். இப்பொழுது 400 படங்கள் வரை தேவா இசையமைத்திருப்பதாக சொல்கிறார்கள். என்னளவில் அது மிகவும் குறைவான எண்ணிக்கையாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு தேவாவின் ஆதிக்கம் இருந்த காலங்கள் அவை.

எல்லோரும் சொல்வது போல இசையமைப்பாளர் தேவா அவர்களின் தனிப்பட்ட குணம் அவ்வளவு வியப்பாய் இருந்திருக்கிறது.   அப்பொழுது சன் டிவியில் ஒரு பேட்டி! பிரபல தொகுப்பாளர் விஜயசாரதி அவரிடம் நேர்காணல் செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது  கேள்வி, “உங்கள் பாடல்களில் வேறு சில இசையமைப்பாளர்களின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறதே!” என்று. அந்தக் கேள்வியின்  நோக்கம் மிகத் தெளிவானது. தேவாவின் பாடல்கள் காப்பி என்பதன்  அர்த்தம் குறித்த நேரடியான கேள்வி. தேவாவின் பெருந்தன்மை அறிந்த ஒன்றுதான் என்றாலும், அவர் விஜயசாரதியிடம், ” பாடல்களை காப்பி அடிச்சு போடுறேன்னு  சொல்றீங்க!” என்ன செல்லமாக தொகுப்பாளர்  முதுகை தட்டி சிரித்தார்.  அதுதான் தேவா. தன் பலத்தையும், தன் பலவீனத்தையும் அவரால் முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் மனம் வாய்த்திருக்கிறது. 

இசையமைப்பாளர் தேவாவின் காலத்தில் ஏன் இப்பொழுது கூட இளையராஜா போலவோ, ரஹ்மான் போலவும் அவருக்கு கடின சாவு விசிறிகள் இருந்ததில்லை. பலர் அவரை ஏற்றுக் கொள்ளாமல் கூட இருக்கலாம். மக்களிடம் மிக எளிதாகச் சென்றடைந்த இசை, சில நேரங்களில் விமர்சகர்களாலும் இசை நுட்பங்களை முன்னிறுத்துபவர்களாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. எளிமையான மெட்டுகள், உடனடியாகப் பிடித்துவிடும் தாளங்கள், கொண்டாட்டத்துக்கு ஏற்ற பாடல்கள் ஆகியவை இசையின் ஆழமின்மைக்கான அடையாளங்களாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. தேவாவின் இசையும் இத்தகைய அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சில கலைஞர்கள் இசை விமர்சனங்களிலும் ரசிகர் விவாதங்களிலும் வாழ்கிறார்கள்; சிலர் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் கொண்டாட்டங்களிலும் வாழ்கிறார்கள். தேவாவை இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக மட்டும் சுருக்கிவிடவும் முடியாது. ஆனால், அவரது இசை ஏற்படுத்திய தாக்கத்துக்கு இணையான விமர்சன அங்கீகாரம் அவருக்குக் கிடைத்திருக்கிறதா என்ற கேள்வியைத் தமிழ் சினிமா இன்னும் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ராஜாக்களும் ரஹ்மானும் இசையின் வழியே தங்களுக்கான சாம்ராஜ்யங்களை உருவாக்கியபோது, தேவா மக்களின் கொண்டாட்டங்களுக்குள் தனது இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். அந்தச் சாம்ராஜ்யத்தின் மதிப்பைத் தீர்மானிப்பது ரசிகர்களின் எண்ணிக்கை அல்ல; காலம் கடந்தும் ஒலித்துக்கொண்டிருக்கும் அவரது பாடல்கள்தான்! தன் பலவீனங்களையும் பலத்தையும் சமமாக அணுகிய  இசைக் கலைஞன் தேவா! 

பெரும் ஆளுமைகளுக்கிடையே தன்னை  தகவமைத்து நிலை நிறுத்திக்கொண்ட  சூழல்களில் தேவா தன்னை எப்பொழுதோ நிரூபித்து விட்டார். இப்பொழுது ஒரு விடைபெறுதல் மட்டுமே  நிகழ்ந்திருக்கிறது. சென்று வாருங்கள் தேனிசையே, நீங்கள் ஒரு தலைமுறையை தோளில் கைபோட்டு அழைத்து சென்ற ஒரு ஒப்பற்ற இசைத்தோழன். மனமிருப்பில் உங்கள் பாடல் எப்பொழுதும் ஒலிக்கும்…!

Author Image

கா.ரபீக் ராஜா

காரைக்குடியை சேர்ந்தவர். சமூகவலைத்தளம் மற்றும் பிற தளங்களில் எழுதி வருபவர். சிறுகதை, நாவல், கட்டுரை தொகுப்பு என எட்டு படைப்புகள் வெளிவந்துள்ளது.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Krishnaraj

சாமான்யக்குரலில் ஒரு சங்கீதக்காரன் - கிருஷ்ணராஜ்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026
singeetham

கற்பனாவாதி Unlimited

November 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?