The Talkie
Thursday, October 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home கட்டுரைகள் இந்தியத் திரைப்படங்கள்

G.D.N திரைப்படமும் நானும்

The Talkie by The Talkie
October 1, 2026
in இந்தியத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
0
G.D.N திரைப்படமும் நானும்
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon முகில்

வாழ்க்கை வரலாறு நூல்கள் எழுதுவதில் உள்ள சௌகரியங்கள், ஒருவரது வாழ்க்கையைப் படமாக்குதற்கு எழுதும்போது கிடையாது. ஏனெனில், புத்தகத்தைப் பொருத்தவரை ஆசியரியரே அரசர். அவர் நினைத்த அளவுக்கு எழுதலாம். விரும்பும் எழுத்துப் பாணியை உருவாக்கிக் கொள்ளலாம். எதை எவ்வளவு எழுதலாம், எதை எழுத வேண்டாம் என்று முடிவெடுக்கும் உரிமையும் ஆசிரியருக்கு உண்டு. அதெல்லாம் திரைக்கதையாசிரியருக்கு வரம்புகளுக்கு உட்பட்டே உண்டு. ஏனெனில், சினிமா என்பது கூட்டு முயற்சி அல்லவா.  

ஒரு பயோபிக் திரைப்படத்துக்கு எழுதுவது என்பது நாயகன் அல்லது நாயகியின் வாழ்க்கையை நமக்குள் வாழ்ந்து பார்த்துவிட்டு, அதைத் திரை எழுத்தில் கொண்டு வருவது. ஆனால், அதுமட்டும் போதாது. அந்த நாயகன் அல்லது நாயகியைச் சார்ந்த, திரைக்கதையில் இடம்பெறுகிற பிற அசல் மனிதர்களின், ஆளுமைகளின் வாழ்க்கையையும் குணவார்ப்பையும் அனுபவங்களையும் உணர்ந்து அதற்கேற்ற எழுத்தைக் காட்சிகளில் கொண்டு வருதலும் அவசியம். ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையைச் சொல்லும் ‘ஜி.டி.என்.’ திரைப்படத்துக்காக எழுதும்போது நான் இப்படிப்பட்ட அனுபவங்களை எல்லாம் நிறையவே சேகரித்துக் கொண்டேன். 

எம்.ஆர்.ராதா, பெரியார், அண்ணா, காமராஜர், நேரு, மு. கருணாநிதி, காந்தி, அம்பேத்கர், வி.வி.கிரி, சர்.சி.வி. ராமன், என்.எஸ்.கிருஷ்ணன், ராஜாஜி என்று அந்தக் காலத்தில் வாழ்ந்த கிட்டத்தட்ட எல்லா ஆளுமைகளுமே ஜி.டி.நாயுடுவோடு நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவர்களுடனான அனுபவங்களும் நிகழ்வுகளும் ஜி.டி.நாயுடுவின் வரலாற்றில் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டிக்கின்றன. ஆக, சுவாரசியமான காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. எதைத் திரைக்கதையில் சேர்ப்பது, எதைத் தவிர்ப்பது என்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

சொல்லப்போனால் நாங்கள் (நானும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமாரும்) எழுதி நீக்கிய காட்சிகளைக் கொண்டே இன்னும் இரண்டு மணி நேரத்துக்குப் படத்தை எடுக்கலாம். அவை அத்தனையும் சர்வ நிச்சயமாக அவ்வளவு நல்ல காட்சிகள். இருந்தாலும் ‘கனத்த’ மனத்தோடுதான் ஒவ்வொரு காட்சியையும் ஸ்கிரிப்டிலிருந்து நீக்கினோம். ஏனெனில், திரைப்படமெனில் அதுவும் பயோபிக் எனில், இரண்டரை மணி நேரத்துக்கு மேல் நீட்டி முழக்கிச் சொன்னால் ரசிகர்களுக்கு அதைப் பார்க்கும் பொறுமை இருக்காது. இப்படி ஒரு Myth இங்கே உண்டு. எப்பாடுபட்டாவது ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே எங்களது மிக முக்கிய நோக்கமாக, பெருங்கனவாக இருந்தது. ஆகவே, சில சமரசங்களுக்கு ஒப்புக் கொண்டோம். ஆம், சமரசங்களின்றிப் பெருங்கனவுகள் சாத்தியப்படுவதில்லை.

இங்கே இன்னோர் உண்மையையும் சொல்லியே ஆக வேண்டும். கோவை வட்டாரம் தவிர, வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு ஜி.டி.நாயுடு என்றால் யார் என்பதே தெரியவில்லை. ஜி.டி.நாயுடு என்றால் யார் என்று தெரிந்தவர்களுக்கும் உண்மையில் அவர் யார் என்று தெரியவில்லை. ‘அவர் பெரிய விஞ்ஞானிப்பா!’ என்று பொத்தாம் பொதுவாகத் தப்பாகப் புரிந்து வைத்திருந்தனர். அதிகம் அறியப்படாத மற்றும் மறக்கப்பட்ட ஓர் ஆளுமையின் வாழ்க்கையை, கமர்ஷியல் சினிமாவாக மாற்றும் சவால் எங்களுக்குப் பிடித்திருந்தது. ஏனெனில் ஜி.டி.நாயுடு தன் தினசரி வாழ்க்கையில் செய்த சம்பவங்களைச் சாதாரணமாக எழுதினால்கூட அது ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான காட்சியாகத்தான் இருந்தது.

உண்மையிலேயே அவர் நாய் பெயரில் வரி கட்டினாரா? உண்மையிலேயே அவர் தான் உருவாக்கிய பொருள்களை எல்லாம் போட்டு உடைத்தாரா? உண்மையிலேயே அவர் கலைக்கல்லூரிகளை எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிவிட வேண்டும் என்று சொன்னாரா? உண்மையிலேயே அவர் நடிகைகள் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட சேலையை அணிந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் தோன்றினாரா? உண்மையிலேயே அவர் தன் மனைவி ரங்கநாயகியை விவாகரத்து செய்தாரா? உண்மையிலேயே அவர் தன் கட்டடங்களுக்கு டைனமைட் பொருத்தினாரா? இப்படியெல்லாமா ஒரு மனிதர் செய்வார்? 

படம் பார்த்துவிட்டு வந்த பலரும் கேட்ட கேள்விகள் இவை. அது உண்மையா, இது உண்மையா, எது உண்மை? ஆம், படத்தில் வந்த மேற்சொன்ன காட்சிகள் அனைத்துமே உண்மை. இதைவிட மேலாகவும் அந்த மனிதர் தம் வாழ்வில் பல விஷயங்களைச் செய்திருக்கிறார். சம்பவங்களைச் செய்வதற்காகவே பிறப்பெடுத்தவன் நான் என்று வாழ்ந்து தீர்த்த மனிதருக்கான காட்சிகளை எழுதுவது என்பது எப்போதும் கொண்டாட்டமாகத்தான் இருந்தது. ஸ்கிரிப்ட் அடுத்தடுத்த வெர்ஸன்களாக உருமாறிக் கொண்டே சென்றபோதும் சலிப்பு உண்டாகவில்லை. காரணம் யாராலும் முழுமையாக எழுதிவிட முடியாத மனிதர் ஜி.டி.நாயுடு என்ற புரிதல் எங்களுக்கு இருந்தது.

சமகாலத்தில் வாழ்ந்த மனிதரது வாழ்க்கையைத் திரைக்கதையாக எழுதுவது ஓரளவுக்கு எளிது. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரைத் திரையில் கொண்டு அதே உயிர்ப்புடன், துடிதுடிப்புடன், இயல்புடன் கொண்டு வர வேண்டுமென்றால் அதிகம் மெனக்கெட வேண்டும். அதுவும் அந்த மனிதர், எல்லோரும் அறிந்த ஆளுமைகளுடன் எப்போதும் உலவியவர் என்றால் கூடுதல் கவனத்துடன் மெனக்கிட வேண்டும். அதிலும் ஆளுமைகள் பேசும் வசனங்களில் கூடக்குறைய எதுவும் இருந்துவிடக்கூடாது என்பது மிகவும் முக்கியம். ஆக, படத்தின் ஒவ்வொரு நொடிக்கான காட்சியும் சவாலாகத்தான் இருந்தது.

அடுத்த சவால், ஒரு வரியில் கிடைத்த உண்மையான தகவலை நான்கைந்து நிமிடங்களுக்கான காட்சியாக மாற்றுவது. நான்கைந்து வருட வாழ்க்கையை நான்கைந்து நொடிக்கான அழுத்தமான வசனத்தில் உள்ளடக்கி ரசிகர்களுக்குக் கடத்துவது. அதுவும் அலுங்காமல் குலுங்காமல் வெண்ணையில் வழுக்கிக் கொண்டு போகும் திரைக்கதையோட்டத்துடன் சொல்வது. எல்லா அனுபவங்களும் இந்தத் திரைக்கதை மற்றும் வசனப் பணியில் எனக்குக் கிடைத்தன.

ஜி.டி.நாயுடு நாத்திகர். சைவ உணவு விரும்பி. கப்பலில் பயணம் செய்வதை விரும்புபவர். விமானம் என்றால் அவருக்குப் பயம். கேமரா பிரியர். வாகனங்கள் மீது அலாதிப் பிரியம். சிறந்த வாசிப்பாளர். தமிழ் மீது அவ்வளவு பற்று உண்டு. இப்படி நுட்பமான உண்மைகளையும் மனத்தில் வைத்து நுணுக்கமாக எழுத வேண்டும். எழுதினோம்.

விருந்தோம்பலில் ஜி.டி.நாயுடுவை யாராலும் வெல்ல முடியாது. கோபம் வந்தால் எப்படி எதிர்வினை ஆற்றுவார் என்று கணிக்கவே முடியாது. அந்தக் காலத்தில் ஜி.டி.நாயுடுவிற்கு நிகராக, கல்விக்காக பெருங்கொடை கொடுத்த இன்னொருவர் கிடையாது. உண்மையாக இல்லாத தொழிலாளர்களை அவரைப் போல் கண்டித்தவர்கள் கிடையாது. உண்மையாக உழைத்த தொழிலாளர்களுக்கு அவரைப் போல் அள்ளி அள்ளிக் கொடுத்தவர்களும் கிடையாது. எல்லாவற்றையும் ஆவணப்படுத்துவதில் ஜி.டி.நாயுடு அவ்வளவு மும்மரமாகச் செயல்பட்டார். சித்த மருத்துவ நிபுணர்களோடு இணைந்து ஆய்வு செய்வதில் விருப்பம் கொண்டிருந்தார். இப்படிப் பல்வேறு உண்மைகளையும் ரசிகர்களுக்குக் கடத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் திரைக்கதையில் காட்சிகள் வைக்க இடம் கிடையாது. போகிற போக்கில் இவற்றையும் தவறாமல் பதிவு செய்துவிடவும் வேண்டும். செய்தோம்.

‘ரைட்டர் நீங்க, எல்லாத்தையும் ஈஸியா எழுதிக்கிட்டு போயிருவீங்க. அதை எக்ஸிக்யுட் பண்றதுக்கு பட்ஜெட் வேணுமே?’ என்று இயக்குநர்கள் எப்போதும் சொல்வதுண்டு. உண்மைதானே! 

ஜி.டி.நாயுடு பேருந்து உரிமையாளர்களை எல்லாம் அழைத்து மாநாடு போட்டார். ஜி.டி.நாயுடு சொகுசுக் கப்பலில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றார். ஜி.டி.நாயுடு ஜெர்மனியில் வணிகக் கண்காட்சியில் கலந்து கொண்டு, தான் தயாரித்த பிளேடை காட்சிப்படுத்தி, போட்டியில் வென்று, அதற்கான பரிசை ஹிட்லரிடமிருந்து பெற்றார். ஜி.டி.நாயுடு இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் சிக்கிக் கொண்டார்.

மேலே எளிமையாகச் சொல்லப்பட்ட நான்கு செய்திகளைக் காட்சிகளாக்க வேண்டுமென்றால் எவ்வளவு பட்ஜெட் ஆகும், எவ்வளவு உழைப்பைக் கொட்ட வேண்டும், எந்த அளவுக்கு மெனக்கெட வேண்டும் என்று யோசித்துப் பார்த்தால் புரியும். அதெல்லாமே இந்தப் படத்தில் சாத்தியமானது. காரணம், இயக்குநரது அர்ப்பணிப்பு. அதற்கு எப்போதும் தோள்கொடுத்து நின்ற ஜி.டி.நாயுடு குடும்பத்தினரது ஒத்துழைப்பு. ஜி.டி.நாயுடு வாழ்ந்த வாழ்க்கையைத் திரையில் நாங்கள் உண்மைக்கு நெருக்கமாகக் கொண்டு வர இயன்றதற்குக் காரணமே அவரது குடும்பத்தினர்தாம். இல்லையென்றால் எங்கள் கனவு சாத்தியப்பட்டிருக்காது.

பீரியட் படத்துக்கான வசனமெழுதுவது என்பது அடுத்த சவால். ‘என்னய்யா, ரொம்ப நல்ல தமிழ்ல பேசுறாங்க. இது நம்ம படம் இல்ல’ என்று இளம் ரசிகர்கள் விலகிச் சென்றுவிடக்கூடாது. ‘அந்தக் காலத்துல பேசுற மாதிரியே இல்லியே. ரொம்ப அந்நியமா இருக்குது’ என்று சீனியர் ரசிகர்கள் முகம் சுளித்துவிடவும் கூடாது. இரண்டுக்கும் இடையில் நின்று எல்லோருக்கும் உணர்வுபூர்வமாகப் பொருந்திப் போகும்படி வசனம் எழுதுவது, அதைத் திருத்தி எழுதுவது, இன்னும் மேம்படுத்தி எழுதுவது, கூடுதலாக எளிமையாக்கி எழுதுவது என்று அது தொடர் பணியாக வருடக்கணக்கில் நீண்டது. சில காட்சிகளுக்கெல்லாம் எத்தனை முறை மீண்டும் மீண்டும் வசனம் எழுதிக் கொடுத்தேன் என்பதற்குக் கணக்கு கிடையாது.

இதற்கெல்லாம் உரிய வெகுமதி என்ன? திரையரங்குகளில் ரசிகர்கள் புன்னகை செய்வதும், கண்ணீர் சிந்துவதும், கைதட்டுவதும், ஆர்ப்பரிப்பதும்தானே. அந்த வெகுமதியைத் தளும்பத் தளும்ப அள்ளிக் கொண்டேன்.

இதையும் தாண்டி ஓர் உயரிய விருது எழுத்தாளனுக்கு உண்டா என்ன!

Author Image

முகில்

முகில். திரைக்கதையாசிரியர். வசன எழுத்தாளர். வரலாறு தொடர்பான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
ஜட்டன்பாய் மற்றும் பிப்போ- திரையிசையின் ஆதி ஆளுமைகள்

ஜட்டன்பாய் மற்றும் பிப்போ- திரையிசையின் ஆதி ஆளுமைகள்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

October 1, 2026
கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

October 1, 2026
குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

October 1, 2026
கரு உரு 05

கரு உரு 05

October 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

October 1, 2026
கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

October 1, 2026
குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

October 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?